தமிழ்நாடு

”இந்தியாவிலேயே சமூகநீதி தமிழ்நாட்டில்தான் உள்ளது” : ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

இந்தியாவிலேயே சமூகநீதி தமிழ்நாட்டில்தான் உள்ளது என ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.

”இந்தியாவிலேயே சமூகநீதி தமிழ்நாட்டில்தான் உள்ளது” :   ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே அரசுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதோடு தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குள்ளும் ஆளுநர் மூக்கை நுழைக்கிறார்.

இதுமட்டுமல்லாது ஒரு ஆளுநருக்கான வேலையைத் தவிர பா.ஜ.கவின் கொள்கை பரப்பு செயலாளர் வேலையைத்தான் செய்கிறார் என அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தனது சனாதன கருத்துகளைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

”இந்தியாவிலேயே சமூகநீதி தமிழ்நாட்டில்தான் உள்ளது” :   ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

தற்போது தமிழ்நாட்டில் சமூகநீதி இல்லை என மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "இந்தியாவிலேயே சமூகநீதி தமிழ்நாட்டில்தான் உள்ளது. சமத்துவம், அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்பதும் இங்குதான் உள்ளது. சமூக நீதிக்கான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கை தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த சமத்துவ கொள்கையையும், திராவிட மாடல் ஆட்சியையும் யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories