தமிழ்நாடு

மாணவர்களின் உணவு உதவித் தொகை ரூ.1500ஆக உயர்த்திய திராவிட மாடல் அரசு: CMக்கு நன்றி சொன்ன அமைச்சர் உதயநிதி!

விடுதி மாணவர்களின் உணவு உதவித் தொகையை உயர்த்திய முதலமைச்சருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தள்ளார்.

மாணவர்களின் உணவு உதவித் தொகை ரூ.1500ஆக உயர்த்திய திராவிட மாடல் அரசு: CMக்கு நன்றி சொன்ன அமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் அமைச்சாரக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கு உள்ள அரசு மாணவர் விடுதிகளில் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும் மாணவர்களின் குறைகளையும் கேட்டரிந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவையும் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து வருகிறார்.

இதையடுத்து இந்த கள ஆய்வு தொடர்பாக முதலமைச்சருக்கு விரிவான அறிக்கை ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விடுதியில் தங்கிப் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1100-லிருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை அடுத்து முதலமைச்சருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், "தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் 22 மாவட்டங்களுக்கு இதுவரை நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்.

குறிப்பாக, மாவட்டங்களில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை & ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வுகளின்போது, விடுதி மாணவர்கள் - அலுவலர்கள் உள்ளிட்டோர் உணவு - தங்குமிடம் உள்ளிட்ட விடுதியின் வசதிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அவற்றை, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்று, ஆலோசனைகளை மேற்கொண்டோம். மேலும், கள ஆய்வுதொடர்பாக விரிவான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினோம். அந்த அறிக்கையின் அடிப்படையில், விடுதியில் தங்கிப் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1100-லிருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்க மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் நம் முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, அரசு விடுதிகளின் உணவு உதவித்தொகை ரூ.100 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில், நம் திராவிட மாடல் அரசு மாணவர் ஒருவருக்கு தலா ரூபாய் 400 உயர்த்தியுள்ளது. இந்த சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. தமிழ்நாடெங்கும் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ - மாணவியருக்கு என் அன்பும் - வாழ்த்தும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories