தமிழ்நாடு

பாஜகவின் பாசிச திட்டங்களுக்கு தலையாட்டும் பல்லக்குத் தூக்கி பழனிசாமி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

பா.ஜ.க.வின் பாசிச திட்டங்களுக்கு தலையாட்டும் அ.தி.மு.கவிற்கு மீண்டும் தோல்விதான் பரிசாக கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் பாசிச திட்டங்களுக்கு தலையாட்டும் பல்லக்குத் தூக்கி பழனிசாமி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (24-09-2023) திருப்பூரில் (காங்கேயம் - படியூர் அருகே) நடைபெற்ற மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

பா.ஜ.க தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கக் கூட தகுதியில்லாத கட்சி என்று நம்மை விட அவர்களுக்கே நன்றாக தெரியும். அதனால்தான் அடிமை அ.தி.மு.க.வை பயமுறுத்தி - அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள். உள்ளே நட்பாக இருக்கிறார்கள். எதற்காக இந்த நடிப்பு? அ.தி.மு.க.வை ஆதரித்தால், அவர்களின் ஊழல்களுக்கு பா.ஜ.க.வும் பொறுப்பேற்க வேண்டி வரும். பா.ஜ.க.வை ஆதரித்தால், பா.ஜ.க.வின் மதவாதத்திற்கு அ.தி.மு.க.வும் துணைபோக வேண்டி வரும். அதனால் நடிக்கிறார்கள்.

'போடு தோப்புக்கரணம்' என்று பா.ஜ.க சொன்னால், 'இந்தா எண்ணிக்கொள்ளுங்கள்' என்று சொல்லிக்கொண்டிருக்கும் கட்சிதான் அ.தி.மு.க. இங்கு இவ்வளவு சண்டை நடந்தபோது, உள்துறை அமைச்சரைப் பார்க்க பழனிசாமி சென்றாரே... என்ன காரணம்? ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வருகிறது, காப்பாற்றுங்கள் என்று காலில் விழ சென்றாரா?

கொடநாடு வழக்கில் இருந்து நழுவிடப் சென்றாரா? எதற்காக தனியாக சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார்? இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிய அமைச்சர்களை திடீர் என்று சந்தித்தார்களே? சென்னையில் இருந்து சென்றால் தெரிந்துவிடும் என்று, கொச்சியில் இருந்து சென்ற மர்ம சந்திப்புகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தின் நன்மைக்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு மூலமாக, தமிழ்நாட்டுக்கு அ.தி.மு.க கொண்டு வந்த நன்மை என்ன? எதுவும் இல்லை.

பாஜகவின் பாசிச திட்டங்களுக்கு தலையாட்டும் பல்லக்குத் தூக்கி பழனிசாமி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

இந்த லட்சணத்தில் ஒரே நாடு - ஒரே தேர்தலை குப்புற விழுந்து ஆதரிக்கிறார் பல்லக்குத் தூக்கி பழனிசாமி. நன்றாக இருக்கிறதல்லவா இந்தப் ’பல்லக்குத் தூக்கி பழனிசாமி’ பட்டம்? என்ன அருகதையில் தமிழ்நாட்டு மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று பழனிசாமி பகல் கனவு காண்கிறார்? பழனிசாமி அவர்களே! சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தால், உங்கள் கட்சி இப்போது இருக்கும் நிலைமைக்கு உள்ளதும் போய்விடும், ஜாக்கிரதை!

பா.ஜ.க.வின் பாசிச திட்டங்கள் எல்லாவற்றிகும் ஆட்சியில் இருந்தபோது தலையாட்டிவிட்டு, இன்றைக்கு பா.ஜ.க.வை எதிர்க்கின்ற மாதிரி மக்களிடம் காட்டிக்கொண்டு, மறைமுகமாக பா.ஜ.க தலைவர்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் கொத்தடிமைக் கூட்டத்திற்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போலவே இந்தத் தேர்தலிலும் படுதோல்வியை பரிசாகத் தர வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories