தமிழ்நாடு

“கீழடியில் கிடைத்த எழுத்துகள்; இந்திய மொழிகளுக்கு தாய் தமிழ் மொழி தான்”: Ex IAS பாலச்சந்திரன் நெகிழ்ச்சி!

“இந்திய மொழிகளில் அனைத்திலும் எழுத்து உருப்பெற்றது தமிழ்மொழியில்தான் என நிருபிக்கப்பட்டுள்ளது.” என நெல்லையில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்கனவு” விழாவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்!

“கீழடியில் கிடைத்த எழுத்துகள்; இந்திய மொழிகளுக்கு தாய் தமிழ் மொழி தான்”: Ex IAS பாலச்சந்திரன் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகம் முழுவதும் மாணவ சமூகம் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் மொழியின் சிறப்பு, அதன் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வை நடத்தி வருகிறது.

நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினர்.

அப்போது அவர் பேசுகையில், "சோழர் காலத்தில் சில இன வேற்றுமை ஆழமாக வேருன்றத் தொடங்கின. அது இன்று வரை தொடர்கிறது. சாதி வேற்றுமை யாரையாவது வாழவைத்துள்ளதா என்றால் கிடையாது. தமிழ்நாட்டில் சாதியால் வேறுபட்டாலும் தமிழன் என்ற ஒற்றுமை உள்ளது. நமது குணம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த நோக்கு, பிறரையும் வாழவைப்பேன் என்பதே.

“கீழடியில் கிடைத்த எழுத்துகள்; இந்திய மொழிகளுக்கு தாய் தமிழ் மொழி தான்”: Ex IAS பாலச்சந்திரன் நெகிழ்ச்சி!

என் மொழி பற்றியிருக்கும் அதேநேரத்தில் பிற மொழிகள் பற்றி தவறாக எண்ணமாட்டேன். யாரும் எதையும் திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அமெரிக்காவில் ஆயிரம் வருடத்திற்கு பின் அனைவரும் சமம் என பேச ஒருவர் வந்தார் என்றால், இங்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என வள்ளுவர் கூறினார். இப்படிப்பட அடிமை இல்லாத சமுதாயம் இருந்துள்ளது.

கீழடியில் பானையில் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மொழிகளில் அனைத்திலும் எழுத்து உருப்பெற்றது தமிழ்தான் என நிருபிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகள் இன்னும் மேற்கொள்ளப் படும் போது இன்னும் நம்முடைய பழமை தெரியும்.

ஆதிச்சநல்லூர் பற்றி உங்களுக்கு ஒரு கேள்வி எழனும். அங்கு கிடைக்கப்பட்ட எலும்புக் கூடுகள் தமிழர்கள் எலும்புக் கூடுகள் மட்டும் அல்ல, ஐரோப்பியர், சீனர்கள் எலும்புக் கூடுகள் கண்டுபிடித்துள்ளார்கள். பல்வேறு தரப்பட மனித எலும்புக் கூடுகள் கிடைக்கும் பகுதியாக இருந்தால், அன்றைய அப்பகுதியில் சென்னை போன்று பெருநகரம் இருந்திருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories