முரசொலி தலையங்கம்

­த­மி­ழர்­கள் பெருமை கொள்­ளும் வகை­யி­ல் 'கீழடி அருங்­காட்­சி­ய­கம்' திறக்கப்பட்டுள்ளது-முரசொலி பாராட்டு!

கீழடி அக­ழாய்­வில் கண்­டெ­டுக்­கப்­பட்ட மாதி­ரி­க­ளின் அறி­வி­யல் காலக்­க­ணிப்பு கி.மு. ஆறாம் நூற்­றாண்­டில் வைகை ஆற்­றங்­க­ரை­யில் நக­ர­ம­ய­மாக்­கல் இருந்­ததை உறு­திப்­ப­டுத்­தி­யது.

­த­மி­ழர்­கள் பெருமை கொள்­ளும் வகை­யி­ல் 'கீழடி அருங்­காட்­சி­ய­கம்' திறக்கப்பட்டுள்ளது-முரசொலி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (08-03-23)

சொல்லியலும் தொல்லியலும் 2

மது­ரைக்கு அருகே கி.மு. 3 ஆம் நூற்­றாண்டு முதல் கி.பி. 1 ஆம் நூற்­றாண்­டுக்கு இடை­யி­லான முது­மக்­கள் தாழி­கள் புதைந்­தி­ருக்­கும் ஈமக்­காடு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

'கலம்­செய் கோவே,கலம்­செய் கோவே

அச்­சுடை சாக்­காட்டு ஆரம் பொருந்­திய

சிறு­வெண் பல்­லி­போ­லத் தன்­னொடு

சுரம்­பல வந்த எமக்­கும் அருளி

வியன்­ம­லர் அகன்­பொ­ழில் ஈமத்­தாழி

அகலி தாக வனைமோ

நனந்­தலை மூதூர்க் கலம்­செய் கோவே' – என்­கி­றது புற­நா­னூற்­றுப்­பா­டல்.

‘எனது காதல் கண­வன் போரில் இறந்­து­விட்­டான். அவனை புதைக்க தாழி இருக்­கி­றது. அது ஒரே ஒரு­வர் மட்­டுமே இருக்­கும் தாழி. என்­னை­யும் சேர்த்து புதைக்­கக் கூடிய பெரிய தாழி­யைச் செய்து தரு­வாயா’ என்று அந்­தப் பெண் வேண்­டு­வ­தைப் போல அந்­தப் பாடல் எழு­தப்­பட்­டுள்­ளது. பாடலை எழு­தி­ய­வர் முது­பாலை என்ற பெண்­பாற் புல­வர். அக்­கா­லத்­தில் எவர் இறந்­தா­லும் தாழி கவித்தே புதைத்த மரபு தமிழ்­நி­லத்­தில் இருந்­துள்­ளது. இவை­தான் இன்று தட­யங்­க­ளா­க­வும் வெளிப்­பட்­டுக் கொண்டு இருக்­கின்­றன.

­த­மி­ழர்­கள் பெருமை கொள்­ளும் வகை­யி­ல் 'கீழடி அருங்­காட்­சி­ய­கம்' திறக்கப்பட்டுள்ளது-முரசொலி பாராட்டு!

சங்­கப் பாடல்­கள் மது­ரையை மூதூர் என்­றும், கூடல் என்­றும் ஆல­வாய் என்­றும் குறிப்­பி­டு­கின்­றன. வைகை நதிக் கரை­க­ளில் தொல்­லி­யல் ஆய்­வா­ளர்­கள் ஆய்வு செய்­த­னர். அதில் வைகை ஆற்­றின் இரு­பு­ற­மும் 293 இடங்­க­ளில் தொல்­லி­யல் எச்­சங்­கள் கண்­டெ­டுக்­கப் பட்­டன. அவற்­றில் மக்­கள் வாழ்ந்­த­தற்­கான அடை­யா­ளம் இருந்த 100 இடங்­கள் அக­ழாய்வு மேற்­கொள்ள தேர்வு செய்­யப்­பட்­டன. முதல்­கட்­ட­மாக சிவ­கங்கை மாவட்­டம் கீழடி கிரா­மத்­தில் தொல்­லி­யல் துறை­யி­னர் அக­ழாய்­வைத் தொடங்­கி­னர்.

தமிழ் இலக்­கி­யத்­தில் குறிப்­பி­டப்­ப­டும் பெரு­ம­ண­லூர் என்­பது கீழ­டி­யாக இருக்­க­லாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. இந்­தி­யா­வி­லேயே அதி­கப்­ப­டி­யான கல்­வெட்­டு­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது தமிழ்­நாட்­டில் தான். அதி­லும் வைகை­யைச் சுற்­றித்­தான். நமக்கு ஏரா­ள­மான இலக்­கி­யம் உண்டு. அதனை மெய்ப்­பிக்­கும் ஆதா­ரங்­க­ளைத் திரட்­டு­வ­தற்கு கீழடி வழி­காட்டி விட்­டது.

­த­மி­ழர்­கள் பெருமை கொள்­ளும் வகை­யி­ல் 'கீழடி அருங்­காட்­சி­ய­கம்' திறக்கப்பட்டுள்ளது-முரசொலி பாராட்டு!
Anupriyam K

2018-–ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்­போது வரை ஐந்து கட்­டங்­க­ளாக அக­ழாய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. தமி­ழர்­க­ளின் பண்­பாட்­டின் முக்­கி­யத்­து­வம் மற்­றும் தொன்­மையை நிரூ­பிக்­க­வும், அதை உல­க­ள­வில் கொண்டு செல்­ல­வும் அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. உல­கப் புகழ்­பெற்ற அறி­வி­யல் ஆய்­வ­கங்­க­ளுக்கு கீழ­டி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்ட முக்­கி­ய­மான கண்­டு­பி­டிப்­பு­களை தொல்­லி­யல் துறை அனுப்பி வைத்­தது. அவர்­க­ளி­டம் இருந்து அதி­கா­ரப்­பூர்­வ­மான முடி­வு­க­ளைப் பெற்­றுள்­ளது. கீழடி அக­ழாய்­வில் கண்­டெ­டுக்­கப்­பட்ட மாதி­ரி­க­ளின் அறி­வி­யல் காலக்­க­ணிப்பு கி.மு. ஆறாம் நூற்­றாண்­டின் முற்­ப­கு­தி­யில் வைகை ஆற்­றங்­க­ரை­யில் நக­ர­ம­ய­மாக்­கல் இருந்­ததை உறு­திப்­ப­டுத்­தி­யது. மேலும், கங்­கைச் சம­வெ­ளி­யின் நக­ர­ம­ய­மாக்­க­லுக்கு சம­கா­ல­மா­னது என்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. கி.மு. ஆறாம் நூற்­றாண்­டில் தமிழ்ச் சமூ­கம் கல்­வி­ய­றி­வும் எழுத்­த­றி­வும் பெற்­றி­ருந்­த­னர் என்­பதை அறி­வி­யல் அடிப்­ப­டை­யில் நிலை­நி­றுத்­தி­யுள்­ளது.

­த­மி­ழர்­கள் பெருமை கொள்­ளும் வகை­யி­ல் 'கீழடி அருங்­காட்­சி­ய­கம்' திறக்கப்பட்டுள்ளது-முரசொலி பாராட்டு!

கீழடி அக­ழாய்­வில் 1000–க்கும் மேற்­பட்ட குறி­யீ­டு­க­ளும், 60-க்கும் மேற்­பட்ட தமிழி எழுத்­துப் பொறிப்­புக் கொண்ட பானை ஓடு­க­ளும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. பானை ஓடு­க­ளில் குவி­ரன் ஆதன், ஆதன் போன்ற தனி­ந­பர்­க­ளின் பெயர்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் வாயி­லாக சமு­தா­யத்­தின் பல்­வேறு பிரி­வி­ன­ரும் கல்­வி­ய­றிவு பெற்­றி­ருந்­த­னர் என்­பது வெளிப்­ப­டு­கி­றது. பண்­டைத் தமிழ்ச் சமூ­கம் கி.மு. ஆறாம் நூற்­றாண்­டில் எழுத்­த­றிவு பெற்­றும், நகர நாக­ரீ­கத்­து­ட­னும் மேம்­பட்ட தமிழ்ச் சமூ­க­மா­க­வும் விளங்­கி­யதை கீழடி அக­ழாய்வு முடி­வு­கள் வாயி­லாக அறி­வி­யல் பூர்­வ­மாக தமிழ்­நாடு அர­சுத் தொல்­லி­யல் துறை நிலை நிறுத்­தி­யுள்­ளது.

கீழடி அக­ழாய்­வில் கண்­டெ­டுக்­கப்­பட்ட தொல்­பொ­ருட்­கள் உல­கத் தமி­ழர்­கள் பொது­மக்­கள் கண்­டு­க­ளிக்­கும் வகை­யில் இரண்டு ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் 31,000 சதுர அடி பரப்­ப­ள­வில் 18 கோடியே 43 லட்­சம் ரூபாய் செல­வில் ‘கீழடி அருங்­காட்­சி­ய­கம்’ தமிழ்­நாடு அர­சால் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

­த­மி­ழர்­கள் பெருமை கொள்­ளும் வகை­யி­ல் 'கீழடி அருங்­காட்­சி­ய­கம்' திறக்கப்பட்டுள்ளது-முரசொலி பாராட்டு!

இந்த அருங்­காட்­சி­ய­கத்­தில், மது­ரை­யும் கீழ­டி­யும், வேளாண்­மை­யும் நீர் மேலாண்­மை­யும், கலம் செய்கோ, ஆடை­யும் அணி­க­லன்­க­ளும், கடல்­வழி வணி­கம், வாழ்­வி­யல் எனும் ஆறு பொருண்­மை­கள் அடிப்­ப­டை­யில் தனித்­தனி கட்­ட­டங்­க­ளில் தொல்­பொ­ருட்­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தமி­ழர்­க­ளின் தொன்மை, பண்­பாடு, நாக­ரி­கம், கல்­வி­ய­றிவு, எழுத்­த­றிவு, உல­கின் பல்­வேறு பகு­தி­யு­டன் கொண்­டி­ருந்த வணி­கத் தொடர்பு ஆகி­ய­வற்­றினை பறை­சாற்­றும் விதத்­தி­லும், அதனை உல­கிற்கு வெளிக்­கொ­ண­ரும் வகை­யி­லும், உல­கத்­த­மி­ழர்­கள் பெருமை கொள்­ளும் வகை­யி­லும் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின், கீழடி அருங்­காட்­சி­ய­கத்தை திறந்து வைத்­துள்­ளார்.

“மூத்த இன­மாம் நம் தமி­ழி­னத்­தின் பெரு­மையை விளக்­கு­கி­றது கீழடி அருங்­காட்­சி­ய­கம்.

தோண்­டத் தோண்­டப் புதை­யல்­கள்! அனைத்­தும் அருங்­காட்­சி­ய­கத்­தில்!

ஈரா­யி­ரம் ஆண்டு வர­லாற்­றின் சின்­னம் கீழடி! அனை­வ­ரும் வந்து பாருங்­கள்!” - என்று முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அழைப்பு விடுத்­துள்­ளார். அழைப்பை ஏற்று அனை­வ­ரும் கீழ­டிக்­குச் சென்று பாருங்­கள்!

banner

Related Stories

Related Stories