இந்தியா

“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!

“இரயில் நிலையங்களில் காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி, கேட்டரிங் சேவைகள் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கும் ‘ஆதர்ஷ்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் என்ன?”

“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எழுப்பிய கேள்வியும், கண்டனமும் பின்வருமாறு,

“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!

“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?”

இரயில் நிலையங்களில் காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி, கேட்டரிங் சேவைகள் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கும் ‘ஆதர்ஷ்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடப்பு ஆண்டில் திறக்கப்பட்ட அல்லது திறப்பு விழாவிற்குத் தயாராக உள்ள ஆதர்ஷ் நிலையங்களின் எண்ணிக்கை என்ன? அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மேலும் நிலையங்களைச் சேர்க்க ஒன்றிய அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories