தமிழ்நாடு

“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

தமிழிசை சௌந்தரராஜனுக்கு, அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” :  தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” திரு.வி.நகர் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு திடல் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளோம். இதேபோல் சலவை கூடத்தையும் நவீன மயமாக்கி, இதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இதையும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்திற்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

புளியந்தோப்பு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆடுதொட்டி செயல்பாட்டில் உள்ளது. இதைவட சென்னை வளர்ச்சி திட்டத்தில் 45 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. ஆடு இறைச்சிக்கு மட்டும் 40 கடைகள், கிட்டத்தட்ட ஒவ்வொரு கடையும் 1400 சதுர அடியில் உள்ளது. 18 கடைகள் மாடு இறைச்சிக்காக கட்டப்பட்டு வருகிறது.

கீழடி, பொருநை அருங்காட்சியகங்களுக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் தமிழர்களின் அடையாளங்கள் பற்றி அவருக்கு தெரியும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இரும்பை பயன்படுத்தியதை ஆதாரங்களுடன் உலகிற்கு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே வழிகாட்டி வருகிறார் எங்கள் இரும்பு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories