தமிழ்நாடு

அண்ணாமலையின் செருப்புக்கு பாதுகாப்பு இருந்த இராணுவ வீரர்.. வெளியான வீடியோ.. பொதுமக்கள் கண்டனம் !

அண்ணாமலையின் செருப்புக்கு பாதுகாப்பு இருந்த இராணுவ வீரர்.. வெளியான வீடியோ.. பொதுமக்கள் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தேனி மாவட்டதில் சுற்றுப்பயணம் முடித்த அண்ணாமலை, பின் மதுரை வழியாக சென்றார். அப்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள வீர தீயாகிகள் நினைவிடத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வந்தார்.

அங்கே கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர் தியாகம் செய்த தியாகிகள் நினைவிடம் மற்றும் அவர்கள் சுடப்பட்ட இடத்தில் மலர் மாலை வைத்து அண்ணாமலை மரியாதை செலுத்தினார். இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு பாதுகாப்பாக துப்பாக்கியை ஏந்திய இசட் பிரிவு இராணுவ வீரரும் இருந்தார்.

அண்ணாமலையின் செருப்புக்கு பாதுகாப்பு இருந்த இராணுவ வீரர்.. வெளியான வீடியோ.. பொதுமக்கள் கண்டனம் !

இந்த நிலையில், அண்ணாமலை கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்த சென்றபோது, தனது செருப்பை வெளியே விட்டு சென்றுள்ளர். அப்போது அவரது இசட் பிரிவு பாதுகாப்பு இராணுவ வீரர், அருகிலே அண்ணாமலை தனது செருப்பை கழற்றியுள்ளார். இதனால் அவர் திரும்பும் வரை அந்த இராணுவ வீரர் அண்ணாமலையின் செருப்பை பாதுகாக்கும் நிலை ஏற்பட்டது.

அதோடு அண்ணாமலையே தனது தான் வரும்வரை இங்கேயே நிற்குமாறு, அந்த இராணுவ வீரரிடம் கூறியதாகவும் கூறபடுகிறது. எனினும் அண்ணாமலையின் இந்த செயலுக்கு தற்போது மக்கள் மத்தியில் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி நெட்டிசன்கள் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

அண்ணாமலையின் செருப்புக்கு பாதுகாப்பு இருந்த இராணுவ வீரர்.. வெளியான வீடியோ.. பொதுமக்கள் கண்டனம் !

மேலும் இந்த செயலுக்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "அண்ணாமலையின் செருப்பை பாதுகாக்க சி.ஆர்.பி.எப் வீரர் பணியமர்த்தப்பட்டது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்; பாதுகாப்பு படை வீரர்களை அவமானப்படுத்தும் அண்ணாமலையும், பாஜகவும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories