தமிழ்நாடு

ADITYA L1: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்து சாதனை படைத்த நிகர்ஷாஜி.. நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்

சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண் நிகர் சாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளார்.

ADITYA L1: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்து சாதனை படைத்த நிகர்ஷாஜி.. நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சூரியனை ஆய்வு செய்ய 424 கோடி ரூபாய் செலவில் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை நேற்று காலை 11.50 மணியளவில் விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. பி.எஸ்.எல்.வி. சி-57 (PSLV-C57) ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. ஆயிரத்து 475 கிலோ எடைக் கொண்ட ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள், பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் சூரியனுக்கும் - பூமிக்கும் இடையே Lagrange point 1 எனும் புள்ளியை சுற்றியுள்ள வட்டப்பாதையில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

சூரியனின் வெளிப்புற பகுதி, சூரிய மேற்பரப்பு, புயல், பூமியில் ஏற்படும் தாக்கம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவுள்ளது. ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளில் 7 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் 125 நாட்கள் பயணித்து சூரியனை ஆய்வு செய்யும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ADITYA L1: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்து சாதனை படைத்த நிகர்ஷாஜி.. நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்

இந்த வரலாற்று சாதனையில் முக்கிய புள்ளியாக அமைந்திருந்தது ஒரு தமிழர் ஆவார். இந்த திட்டத்தில் இயக்குநர் நிகர்ஷாஜி (Nigar Shaji) செங்கோட்டையை சேர்ந்தவர் ஆவார். செங்கோட்டையில் அரசுப்பள்ளியில் படித்த இவர், 10, 12-ம் வகுப்பில் பள்ளியளவில் முதல் மாணவியாக வந்து சாதனை படைத்தார். தொடர்ந்து திருநெல்வேலியில் அரசு பொறியியல் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர், இஸ்ரோவில் இணைந்தது பணியாற்ற தொடங்கினார்.

ADITYA L1: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்து சாதனை படைத்த நிகர்ஷாஜி.. நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்

இஸ்ரோவில் அவர் சேர்ந்து சுமார் 36 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் தற்போது இஸ்ரோவில் முக்கிய பணியின் திட்ட இயக்குநராக இருந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது.

ADITYA L1: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்து சாதனை படைத்த நிகர்ஷாஜி.. நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்

இந்த நிலையில், இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகர்ஷாஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான AdityaL1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் சாஜி-யை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.

ADITYA L1: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்து சாதனை படைத்த நிகர்ஷாஜி.. நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்

தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து Chandrayaan முதல் Aditya வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். ISRO-வின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADITYA L1: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்து சாதனை படைத்த நிகர்ஷாஜி.. நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்

முன்னதாக நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை துவக்கியபோது, அதன் திட்ட இயக்குநராக கோயம்பத்தூரை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை என்பவர் இருந்தார். அப்போது சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது.

தொடர்ந்து சந்திரயான்-2 திட்ட இயக்குநராக வனிதா முத்தையா இருந்தபோது திட்டத்தின் இறுதி பகுதி வரை வெற்றி கரமாக இயங்கிய போதிலும் கடைசி கட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. இருப்பினும் முயர்சியை விடாமல் 3-வது முறையாக நிலவுக்கு சந்திரயான் 3 அனுப்பபட்டுள்ளது.

சந்திரயான் 3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேல் இருக்கிறார். இவரும் அரசுப் பள்ளியில் பயின்றவர் ஆவார். இந்த சூழலில் தற்போது ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக மீண்டும் அரசுப்பள்ளியில் பயின்ற ஒரு தமிழர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories