தமிழ்நாடு

Youtube பார்த்து பிரசவம் பார்த்த கணவர்.. பரிதாபமாக உயிரிழந்த மனைவி: அதிர்ச்சி சம்பவம்!

தருமபுரி அருகே youtube பார்த்து கணவன் பிரசவம் பார்த்ததில் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube பார்த்து பிரசவம் பார்த்த கணவர்.. பரிதாபமாக உயிரிழந்த மனைவி: அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவருக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போச்சம்பள்ளியை சேர்ந்த லோகநாயகி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

தம்பதிகள் இருவரும் இயற்கை மருத்துவம் மீது ஆர்வம் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லோகநாயகி கர்ப்பமனைடந்துள்ளார். தனக்கு இயற்கை முறையிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என கணவனிடம் கூறிவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லோகநாயகிக்கு வலி வந்துள்ளது. இதையடுத்து கணவன் மாதேஷ் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் லோகநாயகிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

Youtube பார்த்து பிரசவம் பார்த்த கணவர்.. பரிதாபமாக உயிரிழந்த மனைவி: அதிர்ச்சி சம்பவம்!

பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்குப் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். youtubeபார்த்து கணவன் பிரசவம் பார்த்ததில் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories