தமிழ்நாடு

பறவைக் காய்ச்சல் பரவல்? : கடலூரில் 10,000-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென உயிரிழப்பு!

கடலூரில் 10,000-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளதால் பண்ணையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பறவைக் காய்ச்சல் பரவல்? : கடலூரில் 10,000-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் மழை, வெயில் என மாறி வரும் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாகப் பொதுமக்களிடையே காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருவது பொதுமக்களிடையேயும் பண்ணையாளர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் உள்ள திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில், தீபாவளி பண்டிகை விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்த கோழிகளே கடந்த 2 அல்லது 3 நாட்களாக திடீரென உயிரிழந்துள்ளன. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது 'பறவைக் காய்ச்சல்' நோயின் தாக்கமாக இருக்குமோ என்று பண்ணை உரிமையாளர்கள் கடும் கவலையடைந்துள்ளனர்.

கோழிகள் அடுத்தடுத்து உயிரிழப்பது குறித்து கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் முருகவேல் தலைமையில், உதவி இயக்குநர் வெங்கடலட்சுமி மற்றும் கால்நடை மருத்துவத் துறை அலுவலர்கள் தம்மனாம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கோழிகள் வளர்க்கப்படும் முறை, பண்ணைகளின் சுற்றுப்புறச் சுகாதாரம், கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனம் மற்றும் குடிநீர் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கோழிகள் திடீரென உயிரிழப்பதற்கான காரணத்தைக் கண்டறிய பண்ணைகளில் இருந்து தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளன. கோழிகளுக்கு ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதா, அல்லது பருவநிலை மாற்றம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா? அல்லது பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளதா என்பது பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும்," என்று தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories