தமிழ்நாடு

“₹.1000 கோடி நிதி.. 5,035 பேருக்கு பட்டா..”: மீனவர்களுக்கு முதலமைச்சர் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்!

மீனவர்களின் மிக நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“₹.1000 கோடி நிதி.. 5,035 பேருக்கு பட்டா..”: மீனவர்களுக்கு முதலமைச்சர் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் டாப்கோ ஃபெட், மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார். இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாநாட்டில் விழா பேருரை ஆற்றிய முதலமைச்சர் மீனவர்களின் மிக நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுக்கு 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவை பின்வருமாறு :-

1. மீனவர்கள் 5035 பேருக்கு புதிதாக பட்டா வழங்கப்படும்.

2. 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும்.

3.மீன்பிடி தடைகால நிவாரனத்தொகை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பலனடைவார்கள்.

4.1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.

5.தூத்துகுடி,திருநெல்வேலி, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட நாட்டு படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 3,400 லிட்டரிலிருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

6. மானியவிலையில் வழங்கப்படும் டீசல் விசைப்படகுகளுக்கு 18 ஆயிரத்திலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுபடகுகளுக்கு 4 ஆயிரத்திலிருந்து 4,400 லிட்டராக உயர்த்தப்படும்

7.தங்கச்சி மடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். ஊந்துகாலில் மீன் இறங்குத்தளம், பாம்பனில் தூண்டில் வளைவு அமைக்கபடும்.

8. மீனவர் விபத்து காப்பு உறுதி திட்டத்தின் கீழ் 205 குடும்பகளுக்கு நிவாரனம் வழங்கப்படும். காணமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி வழங்கப்படும்.

9. மீனவர்களின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1 லட்சத்து 70 ஆயிரத்தை 2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

10. மீனவ கிரமாங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளை பாதுகாக்கவும் கடலோர மேலான்மை திட்டம் அமைத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் 2 லடசத்து 77 ஆயிரம் பேர் பயனடைவார்கள். ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த 10 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories