தமிழ்நாடு

சென்னையில் கார் ஓட்டுநர்களை குறிவைத்து பண மோசடி.. போலி மருத்துவர் சிக்கியது எப்படி?

சென்னையில் கார் ஓட்டுநர்களைக் குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவரை போலிஸார் கைது செய்தனர்.

சென்னையில் கார் ஓட்டுநர்களை குறிவைத்து பண மோசடி.. போலி மருத்துவர் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில், அர்ஜுன் என கூறி கடந்த 8ம் தேதி கார் ஒன்று புக் செய்துள்ளார். அதன்படி சென்னை கீழ்ப்பாக்கம் பகுதிக்குக் காரை ஓட்டுநர் தினேஷ்குமார் எடுத்து வந்துள்ளார்.

அப்போது, "அங்கிருந்த ஒருவர் நான் தான் காரை புக் செய்தேன்,நான் மருத்துவர் என அறிமும் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து காரில் ஏறி கோடம்பாக்கம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்குச் சென்றுள்ளார்.

இந்த விடுதியில்தான் நான் அறை எடுத்துத் தங்கி உள்ளேன். என்றுடன் வந்து கொஞ்சம் மது குடித்துவிட்டு பிறகு பணத்தை வாங்கி கொண்டு செல்லுங்கள் என கார் ஒட்டுநர் தினேஷ் குமாரிடம் அன்பாக கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பி அவருடன் சென்றுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து ஒன்றாக மதுகுடித்துள்ளனர்.

சென்னையில் கார் ஓட்டுநர்களை குறிவைத்து பண மோசடி.. போலி மருத்துவர் சிக்கியது எப்படி?

அப்போது தனது செல்போனில் நெட்ஒர் பிரச்சனை உள்ளது, அவசரமாக நண்பர் ஒருவருக்கு ரூ.8 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும், உங்கள் கூகுள் பேவில் இருந்து நான் சொல்லும் எண்ணிற்கு பணத்தை அனுப்புங்கள், சேர்த்து கொடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார்.

பின்னர் அவர் சொன்னபடி பணத்தை தினேஷ் குமார் அனுப்பியுள்ளார். இதையடுத்து தனது அறைக்குச் சென்று பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் திரும்பி வரவே இல்லை.

இதையடுத்து விடுதியில் அவர் குறித்து விசாரித்தபோது இப்படி ஒருநபர் இங்கு அறை எடுத்து தங்கவில்லை என கூறியுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ் குமார், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பின்னர் இதுகுறித்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் கார் ஓட்டுநர்களை குறிவைத்து பண மோசடி.. போலி மருத்துவர் சிக்கியது எப்படி?

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விடுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் படி சந்தேகத்திற்குரிய நபர் தியாகராய நகர் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிலிருந்து வெளியே வந்தபோது அவரை போலிஸார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அந்த நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் வர்மா என்பதும் மருத்துவர் போல் நடித்து கார் புக் பதிவு ஓட்டுநர்களை ஏமாற்றி பணம் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories