தமிழ்நாடு

”அண்ணாமலை நடத்தும் பாத யாத்திரை பா.ஜ.கவின் இறுதி யாத்திரை”.. கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!

அண்ணாமலை நடத்தும் பாத யாத்திரை பா.ஜ.கவிற்கு இறுதி யாத்திரை என கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

”அண்ணாமலை நடத்தும் பாத யாத்திரை பா.ஜ.கவின் இறுதி யாத்திரை”.. கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், "எதிர்க்கட்சிகள் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கழிப்பதையே தனது கொள்கையாக வைத்துச் செயல்பட்டு வருகிறது பா.ஜ.க மேலும் இதற்குப் பணியாத எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்து, அமலாக்கத்துறைகளை ஏவி மிரட்டி வருகிறது.

தற்போது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறார்கள். இது மோடிக்கும் பா.ஜ.கவிற்கும் பயத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் தான் பா.ஜ.க தனது கூட்டணி கட்சியினரை அழைத்துப் பேசுகிறது.

”அண்ணாமலை நடத்தும் பாத யாத்திரை பா.ஜ.கவின் இறுதி யாத்திரை”.. கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!

நாடாளுமன்ற கூட்டத் தொடரில், கூட்டுறவுச் சங்கம் தொடர்பான மசோதா தாக்கல் செய்திட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் மதக் கலவரம் உருவாகும் நிலை ஏற்படும், இந்த சட்டம் என்பது பா.ஜ.கவின் அரசியல் லாபத்திற்காக மட்டுமே.

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்குக் காரணம் பா.ஜ.கதான். இதே நிலைதான் இந்தியா முழுவதும் உருவாக வேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது.

எதிர்க்கட்சி ஒற்றுமையைச் சீர்குலைக்க எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது நடக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க என்பது மூழ்கும் கப்பல். அந்த கப்பலோடு சேர்ந்து அ.தி.மு.கவும் சேர்ந்து மூழ்கும்.

”அண்ணாமலை நடத்தும் பாத யாத்திரை பா.ஜ.கவின் இறுதி யாத்திரை”.. கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, குற்றவாளிகளைத் தனது கட்சியில் சேர்த்து சாதனை படைத்து வருகிறார். ரபேல் நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட வாட்ச் வாங்கிய அண்ணாமலை ஊழலைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. அண்ணாமலை பாத யாத்திரை செய்வது நல்லது தான் என்றும் அவரின் யாத்திரை பா.ஜ.கவின் இறுதி யாத்திரையாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories