தமிழ்நாடு

ஆசை ஆசையாக நண்டு சாப்பிட்ட புதுமணப்பெண்.. ஹனிமூன் சென்ற இடத்தில் நடந்த துயர சம்பவம்!

கன்னியாகுமரியில் நண்டு சாப்பிட்டு இளம் பெண் உயிரிழந்த சம்பவம் உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசை ஆசையாக நண்டு சாப்பிட்ட புதுமணப்பெண்.. ஹனிமூன் சென்ற இடத்தில் நடந்த துயர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவருக்குக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிருபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து இந்த புதிய தம்பதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெட்டா பகுதிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். இந்த இடம் கேரள எல்லையில் அமைந்துள்ளது. இங்குத் தம்பதி விடுதி ஒன்றில் அறைஎடுத்து தங்கியுள்ளனர்.

ஆசை ஆசையாக நண்டு சாப்பிட்ட புதுமணப்பெண்.. ஹனிமூன் சென்ற இடத்தில் நடந்த துயர சம்பவம்!

அப்போது இவர்களுக்கு விடுதியில் நண்டு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதைக் கணவன் மனைவி இருவரும் ஆசை ஆசையாகச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கிருபாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

பின்னர் உடனே அவரை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசை ஆசையாக நண்டு சாப்பிட்ட புதுமணப்பெண்.. ஹனிமூன் சென்ற இடத்தில் நடந்த துயர சம்பவம்!

மேலும் நண்டு சாப்பிட்டதால் தான் அவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories