தமிழ்நாடு

”தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர் ஆளுநர்”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் தாக்கு!

முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆளுநரின் கருத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர் ஆளுநர்”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14.50 லட்சம் மதிப்பீட்டிலும், ரூ.16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள எல்.சி.ஜி சாலை மற்றும் வேளச்சேரி சாலை ஆகிய பகுதிகளில் முத்தமிழ் அறிஞர் நூற்றாண்டு பல்நோக்கு கட்டடம் மற்றும் நியாய விலை அங்காடிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

அதேபோல், சைதாப்பேட்டை பகுதி அண்ணா சாலையில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

”தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர் ஆளுநர்”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் தாக்கு!

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், " சைதாப்பேட்டை அண்ணா சலையில் மெட்ரோ பணிமனையின் காலி இடங்களில் மாநகராட்சி சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

169 வது வார்டில் நீண்ட கால கோரிக்கையாக நியாய விலை கடை வேண்டும் என்ற நிலையில் LDG சாலையில் ரூ. 14.5 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி- சின்னமலை இணைப்பு சாலையில் ரூ.16 லட்சம் மதிப்பில் மேலும் ஒரு புதிய ரேஷன் கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஒன்றிய அரசு பதினைந்து சதவீதம் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அடுத்த நாளே தமிழ்நாட்டிலே மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்படும். தர்மபுரி, பெரம்பலூர், சென்னை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது பாதிப்படையாது.

முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆளுநரின் கருத்திற்கு எதிர்கட்சி தலைவருக்கு நிதியமைச்சர் அளித்த பதிலே பொருந்தும். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த அக்கறை இல்லாதவர்கள் கவலைப்படாதவர்கள், யோசிக்கவே தெரியாதவர்கள்தான் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சனம் செய்வார்கள். இது ஆளுநருக்கும் பொருந்தும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories