தமிழ்நாடு

”அதற்கான அமைச்சர் அமித்ஷா.. சொந்த அரசாங்கம் பற்றி கூட அறிவில்லை”: அண்ணாமலைக்கு அமைச்சர் TRB ராஜா பதிலடி!

தமிழ்நாடு பா.ஜ.க சொந்த அரசாங்கம் பற்றியும் நிர்வாகம் பற்றியும் கூட அறிவில்லாமல் இருக்கிறார்கள் என அண்ணாமலையை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சித்துள்ளார்.

”அதற்கான அமைச்சர் அமித்ஷா.. சொந்த அரசாங்கம் பற்றி கூட அறிவில்லை”: அண்ணாமலைக்கு அமைச்சர் TRB ராஜா பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 இலட்சம் லிட்டர் பாலினை 4.5 இலட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்து வருகின்றன. இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

”அதற்கான அமைச்சர் அமித்ஷா.. சொந்த அரசாங்கம் பற்றி கூட அறிவில்லை”: அண்ணாமலைக்கு அமைச்சர் TRB ராஜா பதிலடி!

இதுபற்றி அறிந்த உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 'அமித்ஷாவுக்கு இப்படி யாரும் தவறான கடிதத்தை எழுதி இருக்க மாட்டார்கள்' என முதலமைச்சரின் கடிதத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்கு தமிழ்நாடு பா.ஜ.க சொந்த அரசாங்கம் பற்றியும் நிர்வாகம் பற்றியும் கூட அறிவில்லாமல் இருக்கிறார்கள் என அண்ணாமலையை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பா.ஜ.கவின் தமிழ்நாட்டுப் பிரிவு சொல்வதைப் போல 20,000 புத்தகங்களை தாண்டி உண்மையாகவே அது வாசிப்பை தொடங்க வேண்டும். கூட்டுறவுக்கான கொள்கைகளுக்கு ஒன்றிய கூட்டுறவு அமைச்சர்தான் பொறுப்பு. அதற்கான அமைச்சராக இருப்பவர் அமித்ஷா. தமிழ்நாடு பா.ஜ.க சொந்த அரசாங்கம் பற்றியும் நிர்வாகம் பற்றியும் கூட அறிவில்லாமல் இருக்கிறார்கள். பிற பா.ஜ.க தலைவர்களுக்கு சங்கடம் கொடுப்பதை எப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என தெரியவில்லை.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories