தமிழ்நாடு

குதிரை வேண்டும் என ஆசையாகக் கேட்ட மகன்.. மறுத்த தந்தை: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கோவையில் குதிரை வாங்குவதற்குத் தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குதிரை வேண்டும் என ஆசையாகக் கேட்ட மகன்.. மறுத்த தந்தை: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் மோகன். இளைஞரான இவருக்குக் குதிரைகள்மீது அதிக பிரியம் இருந்துள்ளது. மேலும் இவர் horse riding பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனக்குச் சொந்தமாக ஒரு குதிரையை வாங்கி அதில் horse riding செல்ல வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவரது தந்தையிடம் குதிரை ஒன்று வாங்கி கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதற்கு பாலசுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

குதிரை வேண்டும் என ஆசையாகக் கேட்ட மகன்.. மறுத்த தந்தை: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இதன் காரணமாகத் தந்தை மற்றும் மகனுக்கு இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மோகன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தூக்குட்டிக் கொண்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குதித்து போலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories