விளையாட்டு

FIFA 2026: மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்.. சொதப்பிய அர்ஜென்டினா.. எங்கு தடுமாறியது!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை எளிதாக வீழ்த்தி வெற்றிக் கோப்பையை ஸ்பெயின் அணி முத்தமிட்ட நிலையில், எந்த இடத்தில் அர்ஜென்டினா தடுமாறியது என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

FIFA 2026: மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்.. சொதப்பிய அர்ஜென்டினா.. எங்கு தடுமாறியது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான FIFA உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூ ஜெர்ஸி மைதானத்தில் இன்று (ஜூலை 20) நடந்தது. இந்த போட்டியைக் காண கிடத்தட்ட 80,663 ரசிகர்கள் மைதானத்தில் குழுமி இருந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டிக்கு வருகை தந்திருந்தார்.

போட்டி தொடங்குவதற்கு முன்பே, கடைசி நிமிடம் வரை பரபரப்பாக நீளும் கடும் மோதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழ்வதுமுள்ள ரசிகர்கள் மத்தியில் நிலவியிருந்தது என்பதே உண்மை. அந்தளவிற்கு அர்ஜெண்டினா, ஸ்பெயின் ஆகிய இரு அணிகளுமே தங்களின் பலத்தை சம அளவில் தொடர் முழுவதுமே வெளிப்படுத்தியிருந்தனர்.

அர்ஜென்டினாவின் மெஸ்ஸி - ஸ்பெயின் அணியின் யமால் முதன்முறையாக நேருக்கு நேர் மோதுவதாலும் இந்த ஆட்டத்தின் மீது கடும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ஆனால், ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே ஸ்பெயினின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.

ஸ்பெயின் அணி ஒருபக்கம் ஆக்ரோசமான ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்க அர்ஜென்டினாவோ மறுபுறம் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

ஆர்ஜென்டினா தனது முதல் ஷாட்டையே 117-வது நிமிடத்தில்தான் அடித்தது. அதிலும், போட்டி முழுவதும் ஒரு ஷாட் கூட கோல் போஸ்ட்களுக்கு இடையில் செல்லவில்லை. இருப்பினும், இந்த ஆட்டம் கூடுதல் நேரம் வரை நீண்டது.

பந்தைப் பொறுமையாக தங்கள் வசம் தொடர்ந்து வைத்து, துல்லியமான பாஸ்கள் மூலம் அர்ஜென்டினா வீரர்களைச் சோர்வடையச் செய்தது ஸ்பெயின். போட்டி முழுவதும் 65 சதவீதம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின், மொத்தம் 20 ஷாட்களை அடித்தது. அவற்றில் 12 ஷாட்கள் கோலை நோக்கியே சென்றன.

இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே கோல் ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில்தான் கிடைத்தது. அர்ஜென்டினா அணி, போட்டியின் கடைசி 30 நிமிடங்களை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழல் உருவானது. மிட்ஃபீல்டர் என்சோ பெர்னாண்டஸ், ஸ்பெயின் வீரர் பாவ் குபார்சியை கடுமையாக டாக்கிள் செய்ததற்காக இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

FIFA 2026: மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்.. சொதப்பிய அர்ஜென்டினா.. எங்கு தடுமாறியது!

ஒரு வீரர் இல்லாமல் விளையாடியது, ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருந்த அர்ஜென்டினாவின் ஆட்டத்தை மேலும் பாதிப்படையச் செய்தது. அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, போட்டியில் 54 முறை பந்தை டச் செய்தபோதும், ஒரே ஒரு ஷாட் மட்டுமே அடிக்க முடிந்தது. அது கூட கோலாக மாறவில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் ஸ்பெயின் வீரர்கள்.

அர்ஜென்டினாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாத நிலையில், இறுதியில் தனது இரண்டாவது உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது. அதோடு, தொடர்ச்சியாக 38 போட்டிகளில் தோல்வியின்றி விளையாடிய ஐரோப்பிய அணி என்ற சாதனையையும் படைத்தது ஸ்பெயின் அணி .

எகிப்துக்கு எதிரான நாக் அவுட் சுற்றிலும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும், அர்ஜெண்டினா அணி ஆட்டத்தின் இறுதியில் கோல்களை அடித்து வெற்றியை ருசித்திருந்தது. ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா தோல்வி அடைந்த நிலையில், மெஸ்ஸி மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுத காட்சி அர்ஜெண்டினா ரசிகர்களை மேலும் கவலயடையச் செய்தது.

கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் அணிக்கு இந்திய மதிப்பில் பிடித்த அர்ஜெண்டினாவுக்கு இந்திய மதிப்பில் சுமார் 296 கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

2026 கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தொடராகவே உள்ளது. குறிப்பாக ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி இறுதிவரை அதனை சிறப்பாக ஒவ்வொரு அணிகளும் செய்திருந்தன.

போராடி சில அணிகள் வெற்றி பெற்றன, போராடி சில அணிகள் தோல்வியடைந்தன. இருப்பினும், வீரர்களின் கடுமையான பயிற்சிக்கும் உழைப்புக்கும் ஏற்ற வகையில் வெற்றியைப் தனதாக்கியுள்ளது ஸ்பெயின் அணி.

banner

Related Stories

Related Stories