தமிழ்நாடு

டாப் 3 எம்.பிகள் பட்டியலில் திமுக MP MM அப்துல்லா: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் செயல்பாடுக்கு விருது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறப்பாக பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் பட்டியலில் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

டாப் 3 எம்.பிகள் பட்டியலில் திமுக MP MM அப்துல்லா: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் செயல்பாடுக்கு விருது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னையில் உள்ள 'ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன்' (Prime Point Foundation) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமானம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமும், இந்த நிறுவனத்தின் ’ப்ரீசென்ஸ்’ இணைய இதழும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி-களுக்கு 'சன்சத் ரத்னா’ விருதை வழங்கி வருகிறது.

டாப் 3 எம்.பிகள் பட்டியலில் திமுக MP MM அப்துல்லா: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் செயல்பாடுக்கு விருது

இந்த 'சன்சத் ரத்னா’ விருதை எம்.பி-களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த விருதை நாடாளுமன்றத்தில் எம்.பி-கள் தங்கள் பங்களிப்பை எவ்வாறு செயல்படுத்தி வருகின்றனர் என்பதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது சிறந்த மாநிலங்களவை எம்.பி-கள் பட்டியலில் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பிய விவாதங்கள், கலந்து கொண்ட விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், எழுப்பிய கேள்விகள், வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் ’ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன்’ நிறுவனம்' மக்களவை, மாநிலங்களவையின் சிறந்த 3 எம்.பி-களை தேர்ந்தெடுத்துள்ளது.

டாப் 3 எம்.பிகள் பட்டியலில் திமுக MP MM அப்துல்லா: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் செயல்பாடுக்கு விருது

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை தி.மு.க எம்.பி எம். முகமது அப்துல்லா அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். மக்களவை, மாநிலங்களவையின் சிறந்த 3 எம்.பிகள் பட்டியல் பின்வருமாறு :-

=> மக்களவையின் முதல் 3 சிறந்த எம்.பி-கள் !

1. சுப்ரியா சுலே – தேசியவாத காங்கிரஸ் - மகாராஷ்டிரா

2. ஸ்ரீரங் அப்பா பார்னே - சிவசேனா - மகாராஷ்டிரா

3. பித்யுத் பரன் மஹதோ - பா.ஜ.க - ஜார்கண்ட்

டாப் 3 எம்.பிகள் பட்டியலில் திமுக MP MM அப்துல்லா: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் செயல்பாடுக்கு விருது

=> மாநிலங்களவையின் முதல் 3 சிறந்த எம்.பி-கள் !

1. டாக்டர் யாஜ்னிக் அமீ ஹர்ஷத்ரே – காங்கிரஸ் – குஜராத்

2. எம். முகமது அப்துல்லா - திமுக – தமிழ்நாடு

3. டாக்டர் ஃபௌசியா தஹ்சீன் அகமது கான் – தேசியவாத காங்கிரஸ் - மகாராஷ்டிரா

banner

Related Stories

Related Stories