தமிழ்நாடு

“மிசாவையே கண்டவர்கள் நாங்கள்.. எந்த சவாலையும் சந்திக்க தயார்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘பளார்’ பதிலடி!

“மிஷாவிற்கும், தற்பொழுது நடைபெறும் பா.ஜ.கவின் வருமான வரி சோதனைக்கும், எந்த வித்தியாசமும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மிசாவையே கண்டவர்கள் நாங்கள்.. எந்த சவாலையும் சந்திக்க தயார்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘பளார்’ பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்ட தி.மு.க சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளையொட்டி “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் கடந்த 23 ஆம் தேதி துவங்கி வரும் 30ஆம் தேதி இன்று வரை நடைபெறுகிறது.

புகைப்பட கண்காட்சியின் நிறைவு நாளான இன்று, கண்காட்சியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர்.

“மிசாவையே கண்டவர்கள் நாங்கள்.. எந்த சவாலையும் சந்திக்க தயார்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘பளார்’ பதிலடி!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த புகைப்பட கண்காட்சியை ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஒவ்வொரு அனுபவங்கள் கிடைக்கிறது. உழைப்பு என்றால் ஸ்டாலின் என கலைஞர் கூறியுள்ளார். அதனை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

மிஷாவிற்கும், தற்பொழுது நடைபெறும் பா.ஜ.கவின் வருமான வரி சோதனைக்கும், எந்த வித்தியாசமும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். சட்டமன்றத்தில் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஏற்கனவே சில பணிகளும் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு அறிவிப்பாக கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படக் கண்காட்சியில் திருச்சி மாநகராட்சி மேயர், அன்பழகன் சட்ட மன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன்,கதிரவன், இனிக்கே இருதயராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories