தமிழ்நாடு

“BJP MPகள், ஜெய்ஷாவின் சொத்து பட்டியலை வெளியிடலாமே?” : அண்ணாமலைக்கு 7 கேள்விகளை எழுப்பிய சங்கி செய்திகள்!

“எல்லாம் இருக்கட்டும், அண்ணாமலை; இந்த ஏழு கேள்விகளுக்கு பதில் உண்டா?” என அண்ணாமலையின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை சங்கி செய்திகள் என்ற பெயரில் இயங்கும் முகநூல் பக்கம் ஏழு கேள்விகளை எழுப்பியுள்ளது.

“BJP MPகள், ஜெய்ஷாவின் சொத்து பட்டியலை வெளியிடலாமே?” : அண்ணாமலைக்கு 7 கேள்விகளை எழுப்பிய சங்கி செய்திகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே, தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றெல்லாம் கதை விட்டு வருகிறார். அதேபோன்று இவரின் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.

இதனால் இவர் பேசும் கருத்துக்களுக்கு எவ்விதமான கருத்துகளும் சொல்ல முடியாமலும், வெளியே தலைகாட்ட முடியாமலும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் இருந்து வருகின்றனர். அதனால், பா.ஜ.க மூத்த தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கு கட்சிக்குள் மோதல் போக்கு இருந்து வருகிறது.

“BJP MPகள், ஜெய்ஷாவின் சொத்து பட்டியலை வெளியிடலாமே?” : அண்ணாமலைக்கு 7 கேள்விகளை எழுப்பிய சங்கி செய்திகள்!

அண்மையில் கூட அண்ணாமலை கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தெரியவந்ததையடுத்து பலரும் அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என பல்வேறு கேள்விகள் எழுந்தது.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "நான் தேசியவாதி. ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட வாட்ச்சை கட்டியிருக்கின்றேன். உலகத்துலேயே 500 வாட்ச்கள் தான் இருக்கு, என்னோடது 149 வாட்ச். மேலும் இதுதொடர்பான அனைத்து ஆவணங்களை வெளியிடுவேன்” என்றார்.

“BJP MPகள், ஜெய்ஷாவின் சொத்து பட்டியலை வெளியிடலாமே?” : அண்ணாமலைக்கு 7 கேள்விகளை எழுப்பிய சங்கி செய்திகள்!

குறிப்பாக ஏப்ரல் 1ம் தேதி வாட்ச் பில்லை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். ஏப்ரல் 1 கடந்தும் அண்ணாமலை வாட்ச் பில் குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரபேல் வாட்ச் பில் என்ற பெயரில் ஒரு துண்டு சீட்டை காட்டியுள்ளார். ரபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். 3 லட்சத்திற்கு இந்த வாட்சை நான் வாங்கினேன்.

சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரபேல் வாட்சை வாங்கினேன். 2021ம் ஆண்டு இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார் என தற்போது மற்றொரு கதையை சொல்லியுள்ளார். மேலும் வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள்தான் தருகிறார்கள் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

“BJP MPகள், ஜெய்ஷாவின் சொத்து பட்டியலை வெளியிடலாமே?” : அண்ணாமலைக்கு 7 கேள்விகளை எழுப்பிய சங்கி செய்திகள்!

இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருக்கும் இதை எல்லாம் கேட்டா நம்புற மாதிரியா இருக்கு என்ற மனநிலையே இருந்திருக்கும். இந்நிலையில், “எல்லாம் இருக்கட்டும், அண்ணாமலை; இந்த ஏழு கேள்விகளுக்கு பதில் உண்டா?” என அண்ணாமலையின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை சங்கி செய்திகள் என்ற பெயரில் இயங்கும் முகநூல் பக்கம் ஏழு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து சங்கி செய்திகள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊழல் பட்டியலை வெளியிடுவேன் எனக் கூறிவிட்டு, தி.மு.க.வினர் பற்றி சொத்துப் பட்டியலென ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த சொத்துப் பட்டியலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிப்பார்கள் என தி.மு.க.வின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெளிவாகச் சொல்லிவிட்டார். அதற்கு அண்ணாமலை பதில்கூற வேண்டிய கடமை இருப்பது ஒருபுறம் இருக்க, அவருக்கு மேலும் ஏழு கேள்விகள்!

“BJP MPகள், ஜெய்ஷாவின் சொத்து பட்டியலை வெளியிடலாமே?” : அண்ணாமலைக்கு 7 கேள்விகளை எழுப்பிய சங்கி செய்திகள்!

1. இருபதாயிரம் கோடி மர்மக் குற்றச்சாட்டில் சிக்கிய அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான தொடர்பு பற்றி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில், இரண்டு அவைகளுமே முடக்கப்பட்டுவிட்டன. அதற்கு பதில்சொல்ல முடியாமல், கண்டபடி பேசிவரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, இன்று அளித்த பேட்டி எதற்காக... குற்றச்சாட்டுக்கு பதில்சொல்ல முடியாததற்கான சமாளிப்பா?

2. கடந்த பத்தாண்டுகளில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து 4,189 சதவீதம் உயர்ந்துள்ளது என சனநாயகச் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ADR அறிக்கை வெளியிட்டுள்ளது; இதில் முதலிடம் பிடித்திருப்பவர் பாஜக எம்.பி.ரமேஷ் சந்தப்பா என்பதைப் பற்றி அண்ணாமலையிடம் பதில் இல்லையே!?

“BJP MPகள், ஜெய்ஷாவின் சொத்து பட்டியலை வெளியிடலாமே?” : அண்ணாமலைக்கு 7 கேள்விகளை எழுப்பிய சங்கி செய்திகள்!
எம்.பி.ரமேஷ் சந்தப்பா

3. நாட்டிலேயே முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தேர்தல் பத்திரங்கள் மூலம், பாஜக கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1,450 கோடி நிதி வாங்கியுள்ளதே; அந்தக் கட்சிக்கு நிதி அளித்தவர்களின் விவரத்தை, ஊழலுக்கு எதிரான உத்தமரைப் போல வேடமிட்டிருக்கும் அண்ணாமலை வெளியிடலாமே... அப்படி வெளியிடுவதில் என்ன தயக்கம்?

4. பா.ஜ.க. முக்கிய தலைவர்- ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பங்குதாரராக உள்ள டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சொத்து, 2017ஆம் ஆண்டில் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரே ஆண்டில் ரூ.80 கோடியாக அதிகரித்தது.

ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு சவால்விட்டாரே, அமித்ஷா; அவர் வழியில் ஆதாரம் இருந்தால் அண்ணாமலையும் நீதிமன்றத்துக்கு ஏன் போகவில்லை? நீதிமன்றத்துக்குப் போனால் இப்படியெல்லாம் ஊரை ஏமாற்றி கதையளப்பதெல்லாம் நடக்காது அல்லவா? எந்த ஒன்றையும் ஆவணமாக நிரூபிக்காவிட்டால், சிக்கலாகிவிடுமே!

“BJP MPகள், ஜெய்ஷாவின் சொத்து பட்டியலை வெளியிடலாமே?” : அண்ணாமலைக்கு 7 கேள்விகளை எழுப்பிய சங்கி செய்திகள்!

5. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், 14.04.2016 அன்று அதிமுகவுக்கு எதிராக அமித்ஷா சொன்ன ஊழல் குற்றச்சாட்டுகள், அண்ணாமலைக்கு ஞாபகம் இருக்கிறதா... அல்லது அப்படி ஒன்று நடந்ததே தெரியாதா? பொதுவெளியில் வைக்கப்பட்டு, பரவலான அந்த குற்றச்சாட்டுகள் இப்போது என்ன ஆனது என்பதை அண்ணாமலை சொல்வாரா? அவரால் சொல்லமுடியுமா?

6. தெய்வீகத்துக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி எனக் காட்டிக்கொண்டு ஊரை ஏமாற்றித்திரியும் இவர்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை, பாஜக மாநில நிர்வாகி நயினார் நாகேந்திரனின் மகன் அபகரித்துள்ளார் என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளதே? அதைப் பற்றி ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார்? எது இதைப் பற்றிப் பேசவிடாமல் அண்ணாமலையின் வாயை அடைக்கிறது?

“BJP MPகள், ஜெய்ஷாவின் சொத்து பட்டியலை வெளியிடலாமே?” : அண்ணாமலைக்கு 7 கேள்விகளை எழுப்பிய சங்கி செய்திகள்!

7. முக்கியமான கேள்வி, இது அண்ணாமலை பற்றியது; அவரே பதில் கூறியாக வேண்டும்... ”எல்லாம் இருக்கட்டும், அண்ணாலை.. உங்கள் நண்பர் கோவை சிவக்குமார் மூலமாக எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் பெரும் தொகை தருவதாக வரும் குற்றம்சாட்டைப் பற்றி மூச்சுவிடாமல் இருக்கிறீர்களே, ஏன்?”

சென்னையில் இன்றைக்கு நடத்திய செய்தியாளர் சந்திப்புக் கூத்தைப்போல, இவற்றுக்கும் பதில் சொல்லமுடியாமல் வேறு கதை எதையாவது யோசிக்கத் தொடங்குவீர்களோ?!” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories