தமிழ்நாடு

‘கேள்வி கேட்டா பதில் தெரியாது.. முட்டை மார்க் உனக்கு’: அண்ணாமலை Pressmeet - நக்கலடித்த எஸ்.வி.சேகர் !

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை மறைமுகமாக அதே கட்சியை சேர்ந்த எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

‘கேள்வி கேட்டா பதில் தெரியாது.. முட்டை மார்க் உனக்கு’: அண்ணாமலை Pressmeet - நக்கலடித்த எஸ்.வி.சேகர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே, தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றெல்லாம் கதை விட்டு வருகிறார். அதேபோன்று இவரின் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.

இதனால் இவர் பேசும் கருத்துக்களுக்கு எவ்விதமான கருத்துகளும் சொல்ல முடியாமலும், வெளியே தலைகாட்ட முடியாமலும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் இருந்து வருகின்றனர். அதனால், பா.ஜ.க மூத்த தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கு கட்சிக்குள் மோதல் போக்கு இருந்து வருகிறது.

‘கேள்வி கேட்டா பதில் தெரியாது.. முட்டை மார்க் உனக்கு’: அண்ணாமலை Pressmeet - நக்கலடித்த எஸ்.வி.சேகர் !

அண்மையில் கூட அண்ணாமலை கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தெரியவந்ததையடுத்து பலரும் அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என பல்வேறு கேள்விகள் எழுந்தது.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "நான் தேசியவாதி. ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட வாட்ச்சை கட்டியிருக்கின்றேன். உலகத்துலேயே 500 வாட்ச்கள் தான் இருக்கு, என்னோடது 149 வாட்ச். மேலும் இதுதொடர்பான அனைத்து ஆவணங்களை வெளியிடுவேன்” என்றார்.

குறிப்பாக ஏப்ரல் 1ம் தேதி வாட்ச் பில்லை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். ஏப்ரல் 1 கடந்தும் அண்ணாமலை வாட்ச் பில் குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தார்.

‘கேள்வி கேட்டா பதில் தெரியாது.. முட்டை மார்க் உனக்கு’: அண்ணாமலை Pressmeet - நக்கலடித்த எஸ்.வி.சேகர் !

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரபேல் வாட்ச் பில் என்ற பெயரில் ஒரு துண்டு சீட்டை காட்டியுள்ளார். ரபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். 3 லட்சத்திற்கு இந்த வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரபேல் வாட்சை வாங்கினேன். 2021ம் ஆண்டு இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார் என தற்போது மற்றொரு கதையை சொல்லியுள்ளார்.

மேலும் வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள்தான் தருகிறார்கள் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருக்கும் இதை எல்லாம் கேட்டா நம்புற மாதிரியா இருக்கு என்ற மனநிலையே இருந்திருக்கும்.

இந்நிலையில், அண்ணாமலையின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை பா.ஜ.க முன்னாள் நிர்வாகி எஸ்.வி.சேகர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னங்க அந்த பையன் பாஸ் பண்ண வாய்பே இல்லயே. ஏங்க இன்னிக்கு கேள்வி பேப்பர் கொடுத்தா அடுத்தவாரம்தான் பதில் சொல்லுவேங்கிறான்.

என்ன பரிட்சை எழுதி என்ன பிரயோஜனம். புக்கை பாத்துதான் எழுதினதா சொன்னாங்க. கடைசீல 10 வருஷ பழைய ஆனந்த விகடன் நக்கீரன் பாத்து எழுதின மாதிரி இருக்கு:” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories