தமிழ்நாடு

அவதூறு செய்திகளை பரப்பும் பாஜக ‘WAR ROOM’ கும்பல்.. அண்ணாமலையின் ஆலோசகர் கைது - தட்டித்தூக்கிய போலிஸ் !

போலி செய்தி வெளியிட்டு, அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய கோவை பா.ஜ.க தொழிற்பிரிவு துணை தலைவரை சைபர் கிரைம் போலிஸார் கைது செய்துள்ளனர்.

அவதூறு செய்திகளை பரப்பும் பாஜக ‘WAR ROOM’ கும்பல்.. 
அண்ணாமலையின் ஆலோசகர் கைது - தட்டித்தூக்கிய போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு பா.ஜ.கவில் இணைந்து உடனே தலைவர் பொறுப்புக்கு அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகு, தமிழ்நாட்டு பா.ஜ.கவையே மேலும் அதளாதளத்திற்குள் கொண்டுச் சென்றதே அண்ணாமலை சாதனை என சொந்தக் கட்சிகாரர்களே விமர்சிக்கும் வகையில் அவரது செயல்பாடு உள்ளது.

விவரம் தெரியாமல் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பா.ஜ.க தலைவர்களுக்கு மத்தியில், தான் சொல்வது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என தெரிந்தே உருட்டுவதில் அண்ணாமலை எப்போதுமே தனி ரகம் தான்.

அதுமட்டுமல்லாது, அடுத்தடுத்து ஆபாச வீடியோ, ஆடியோ மற்றும் பாலியல் சர்ச்சை புகார்கள் பாஜக மீது குவிந்துள்ளது. இது ஒருபுரம் இருக்க அண்ணாமலையின் வார் ரூம் கும்பல் மூலம் தொடர்ந்து அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர்.

அவதூறு செய்திகளை பரப்பும் பாஜக ‘WAR ROOM’ கும்பல்.. 
அண்ணாமலையின் ஆலோசகர் கைது - தட்டித்தூக்கிய போலிஸ் !

அந்தவகையில், போலி செய்தி வெளியிட்டு அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய கோவை பா.ஜ.க தொழிற் பிரிவு துணை தலைவரை சைபர் கிரைம் போலிஸார் கைது செய்துள்ளனர். தமிழக பாஜக தொழில்துறை பிரிவு துணை தலைவரும், அண்ணாமலை ஆலோசகருமான செல்வகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்து அவதூறு பரப்பி வந்துள்ளார்.

கணபதி புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தை தொடர்ந்து காளப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories