தமிழ்நாடு

சேரை தூக்கி வீசி ரகளை.. அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு - கைகலப்பில் முடிந்த பா.ஜ.க கூட்டம்!

ராமநாதபுரத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சேரை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேரை தூக்கி வீசி ரகளை..
அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு - கைகலப்பில் முடிந்த பா.ஜ.க கூட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் திருமண மஹால் ஒன்றில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட தரணி முருகேசன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முரளிதரன் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் நிர்வாகிகள் வெளியேறும் சமயத்தில், பழைய மாவட்ட தலைவர் கதிரவனின் ஆதரவாளரான பாலா என்கிற சேட்டை பாலா திடீரென புகுந்து தகராறில் ஈடுபட்டார். அப்போது சேர்கள் தூக்கி வீசப்பட்டன.

சேரை தூக்கி வீசி ரகளை..
அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு - கைகலப்பில் முடிந்த பா.ஜ.க கூட்டம்!

அதனைத் தொடர்ந்து அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதட்டம் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் பத்திரமாக பாதுகாப்பாக கார்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது வாசலுக்கு வந்த அந்த சேட்டை பாலா வாகனங்களில் சென்றவர்களை நோக்கி கடுமையான வார்த்தைகளால் திட்டி விமர்சித்தார்.

அதனை தொடர்ந்து அங்கிருந்த போலிஸார் பாலாவை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பாஜகவின் இந்த ரகளையால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.

banner

Related Stories

Related Stories