தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்கு வெளிமாநில சுற்றுலா.. பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே வெளியிட்டுள்ள 18 அறிவிப்புகள்!

வேளாண்மை உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கையில் 18 புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் வெளியிட்டுள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு வெளிமாநில சுற்றுலா.. பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே வெளியிட்டுள்ள 18 அறிவிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய சட்டப்பேரவையில் வேளாண்மை உழவர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் 18 புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

1. இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 10 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படும்.

2. வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ், பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்திட அனைத்து துறைத் தலைவர்களுக்கு பணி நிலை மேலாண்மை அதிகாரம் வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு வெளிமாநில சுற்றுலா.. பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே வெளியிட்டுள்ள 18 அறிவிப்புகள்!

3. நெல் உற்பத்தியை அதிகரிக்க துத்துநாக சத்தைக் கரைத்துக் கொடுக்கும் திரவ உயிர் உரத்தை இரண்டு இலட்சம் ஏக்கருக்கு 50% மானியத்தில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்படும்.

4. கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்த கரும்பு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டி மருந்து ரூ. 45 லட்சம் செலவில் வழங்கப்படும்.

5. கரும்பு சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை நேரில் அறிந்து கொள்ளும வகையில் 100 கருப்பு விவசாயிகளை வெளிமாநிலங்களுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்வதற்கு 2000 கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்கு ரூ.30 லட்சம் செலவிடப்படும்.

6. கள்ளக்குறிச்சி 2, பெரம்பலூர், செங்கல்வராயன் சர்க்கரை ஆலைகளில் தலா ஒரு புதிய உருளை ரூ. 1 கோடியே 18 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

7. திருப்பத்தூர், சேலம், மதுராந்தகம், எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் தலா ஒரு காற்றழுத்த இயந்திரமும், கள்ளக்குறிச்சி 2, எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருவழி மையப்படுத்தப்பட்ட உயவு அமைப்பு தலா ரூ.85 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

8.மரவள்ளி மகசூலைப் பெருக்க நடவுக்குச்சிகள், உரம், பயிர்ப் பாதுகாப்பு, நடவுக்குச்சி வெட்டும் கருவிகளுக்கு மானியம் வழங்கி ரூ. 2 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு வெளிமாநில சுற்றுலா.. பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே வெளியிட்டுள்ள 18 அறிவிப்புகள்!

9. தோட்டக்கலைப் பயிர்களில் சந்தை சார்ந்த தொழில்நுட்ப முறைகளை துல்லியமாக செயல்படுத்துவதற்காக தோட்டக்கலை தொழில்நுட்ப அலுவலர்கள் வேளாண் விற்பனை வேளாண் வணிகத் துறையில் சிறப்பு பணியமர்த்தப்படுவார்கள்.

10. தேசிய மின்னணு வேளாண் சந்தை உத்திகள், பண்ணை அளவிலான வர்த்தகம் குறித்து வேளாண்மை தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

11. தோட்டக்கலை இடபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 20 வட்டாரங்களில் தோட்டக்கலைக் கிடங்குகள் 1 கோடி செலவில் கட்டப்படும்.

12. திருச்சியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையத்தினை வலுப்படுத்திட ரூ.3 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

13. வேளாண்மை இயந்திர வாடகைத் திட்டத்தினை வட்டார அளவில் கொண்டு செல்லும் வகையில் 15 வேளாண் இயந்திரக் கூடங்கள் ரூ.2 கோடியே 85 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

14. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்திட அரசு வணிக வளாகங்களில் சந்தை இணைப்பு வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும்.

15. கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்திரி, விருதுநகர் அதலைக்காய், திண்டிவனம் பனிப்பயிறு, கரூர் சேங்கல் துவரை, ஜவ்வாதுமலை சாமை ஆகிய ஐந்து வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குயீடு பெறுவதற்காக ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

16.திண்டுக்கல் கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.78 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

17. தருமபுரி மாவட்டத்தில் சுனைநீர் வடிப்பகுதி மேம்பாட்டுக்கான திட்டம் 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.14 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

18. மாநில அளவிலான வேளாண் கண்காட்சி திருச்சியிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வாழை, மலர்களுக்கான கண்காட்சி சென்னையிலும் பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும்.

banner

Related Stories

Related Stories