அரசியல்

போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?

மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தைக் கண்டும் காணாமல் சென்ற முதலமைச்சர் விஜய்.

போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டை 10 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் வகையில், மாநிலம் முழுவதும் மின்வெட்டு சிக்கல் தலைவிரித்தாடுகிறது.

மின்வெட்டு ஏற்படுகிறது என்பது மாயைத் தோற்றம் என்பதாக பேசும் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலேயே மின்வெட்டு ஏற்படுகிறது.

ஒரு புறம் ‘சுட்டெரிக்கும் வெயில்’ வாட்டி வதைக்கிறது; மறு புறம் ‘மின்வெட்டு’ வாட்டி வதைக்கிறது என மக்கள் நடுத்தெருவிற்கு வந்து நாள்தோறும் போராடி வருகின்றனர்.

மின்வெட்டு சிக்கலுக்கு பொறுப்பேற்க வேண்டிய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், அவதூறுகளை அள்ளி வீசுவதில் மும்முரம் காட்டுகிறாரே தவிர, தக்க நடவடிக்கைகளை எடுத்ததாக இல்லை.

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு ஊழியர்கள் பற்றாக்குறைதான் முக்கியக்காரணம் என்றும் அவ்வப்போது குற்றம்சாட்டி வரும் நிர்மல் குமார், இதே அளவு ஊழியர்களை வைத்துத்தான் கடந்த ஆட்சியில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது என்பதை மறந்துவிட்டாரா... அல்லது மறந்ததுபோல் நடித்துவருகிறாரா என்பதற்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை.

போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?

இந்நிலையில், அமைச்சர் கூறும் குற்றச்சாட்டை சரி செய்ய, அதாவது மின்வாரியத்தில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை களைய, சென்னை மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் அருகே, காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குமாறும் கோரிக்கை வைத்து நூற்றுக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் ‘ரீல்ஸ்’ என்னும் முக்கியப்பணியை நிறைவு செய்வதற்காக, ஆய்வு என்ற பெயரில் இன்று (செப்.23) மின்வாரியத் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்கவும் இல்லை, காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உறுதியளிக்கவும் இல்லை.

இதுபோல், வீண் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஆட்சியாளர்களின் கண் முன்னே இருக்கும் ‘மின்வெட்டு சிக்கலுக்கானத் தீர்வை’, கண்டும் காணாததுபோல் த.வெ.க.வினர் இயங்கி வருவது, மின்சார ஊழியர்களிடத்தும், மக்களிடத்தும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சிற்கு மூன்று முதலீட்டு ஒப்பந்தங்கள் என்று காட்சிப்படுத்தி, கார் ரேஸைக் காண ‘ஒரு வாரம்’ லண்டன் சென்று திரும்பும் முதலமைச்சருக்கு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை சந்திக்க 5 நிமிடம்கூட இல்லையா? என பரவலாக கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஆனால், வழக்கம்போல், பின்னணி இசையுடன் அவர் ஆய்வுக்கு வந்ததை ரீல்சாக பரப்புகிறார்களே தவிர, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அவர் பார்க்காமல் சென்றதை மறைத்து வருவது எளிய மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories