தமிழ்நாடு

500 மீன இளைஞர்களுக்கு மீன்பிடி படகு.. 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீனவர் நலத்துறையில் 33 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

500 மீன இளைஞர்களுக்கு மீன்பிடி படகு.. 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய சட்டப்பேரவையில் மீன்வளம் மற்றும் மினவர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் 33 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

1. மீன்பிடி கலன்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி உரிமத்தினை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் நடைமுறை கொண்டுவரப்படும்.

2. தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை ரூ.15,000 லிருந்து ரூ.25,000 உயர்த்தி வழங்கப்படும்.

3. கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.250 லிருந்து ரூ.350 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

4. தமிழ்நாட்டில் உள்ள 10,000 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 % மானியத்தில் 40,000 உயிர்காப்பு சட்டைகள் (Life Jacket) மொத்தம் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

5. நாகப்பட்டினம் மாவட்டம், சாமந்தான்பேட்டையில் ரூ.40 கோடி செலவில் சிறிய மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படும்.

500 மீன இளைஞர்களுக்கு மீன்பிடி படகு.. 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

6. ரூ.49 கோடி செலவில் இரையுமன்துறை மீன் இறங்கு தளத்தினை தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தும் பணி மற்றும் நாகூர் பட்டினச்சேரி மற்றும் கீச்சான்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் கடற்கரையோரத்தில் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும்.

7. செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலிகுப்பத்தில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சின்னாங்குடி மீன் இறங்குதளம் மேம்பாட்டு பணிகள் ரூ.49 கோடியில் மேற்கொள்ளப்படும்.

8. இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்குவாடி மற்றும் ரோச்மாநகர் ஆகிய மீன் இறங்கு தளங்கள் ரூ.45 கோடி செலவில் தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தப்படும்.

9. திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைத்தல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், மேலகடியப்பட்டணம் மீன் இறங்குதளம் தூண்டில் விளைவுகளுடன் கூடிய மேம்பாட்டு பணிகள் ரூ.45 கோடியில் மேற்கொள்ளப்படும்.

10. தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீன் இறங்குதளம் தூண்டில் வளைவுகளுடன் ரூ.41 கோடியில் மேம்படுத்தப்படும்.

11. திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி மற்றும் இடிந்தகரை, இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மற்றும் நம்புதாளை, கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வடக்கு, தெற்கு மற்றும் சூர்யா நகர், விழுப்புரம் மாவட்டம் முட்டுக்காடு அழகன்குப்பம் ஆகிய 9 மீனவ கிராமங்களில் ரூ.40 கோடியில் புதிய மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

12. திருவள்ளூர் மாவட்டம், நொச்சிக்குப்பம், திருவாரூ மாவட்டம் முனங்காடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய 3 மீனவ கிராமங்களில் ரூ.23 கோடி செலவில் புதிய மின் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.

13. கன்னியாகுமரி மாவட்டம், அன்னை நகர் மீன் இறங்கு தளத்தினை தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்துதல் மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தூர்வாருதல் ஆகிய பணிகள் மொத்தம் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படும்.

14. தூத்துக்குடி மாவட்டம், வீரபண்டியன்பட்டினம் மற்றும் பெரியதாழை, இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், வாலிநோக்கம் மற்றும் மோர்பனை ஆகிய 5 மீன் இறங்க தளங்கள் மொத்தம் ரூ. 25 கோடி செலவில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

15. திருவள்ளூர் மாவட்டம், அண்ணாமலைச்சேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் ஆகிய மீன் இறங்கு தளங்கள் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்.

16. தஞ்சாவூர் மாவட்டம், நெய்தலூர் அரசு மீன் பண்ணையில் மீன் வளர்ப்பு குளங்கள் மேம்பாட்டு பணிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு பணிகள் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.

17. தஞ்சாவூர் மாவட்டம், சம்மைப்பட்டினம், காரங்கடா, பிள்ளையார் திடல், அடைக்கத்தேவன் மற்றும் கொள்ளுக்காடு ஆகிய இடங்களில் உள்ள படகு செலுத்தும் கால்வாய்கள் மற்றும் முகத்துவாரப் பகுதிகள் மொத்தம் ரூ.3 கோடியே 97 லட்சம் செலவில் தூர் வாரி சீரமைக்கப்படும்.

500 மீன இளைஞர்களுக்கு மீன்பிடி படகு.. 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

18. திண்டுக்கல் மாவட்டம் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மூலம் 80 லட்சம் செலவில் நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.

19. தமிழ்நாட்டின் அண்மை கடற்பகுதியில் குறைந்து வரும் மீன் வளத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.3 கோடி செலவில் கடல் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படும்.

20. 500 மீன இளைஞர்களுக்கு மீன்பிடி படகு ஓட்டுநர் பயிற்சி ரூ.31 லட்சத்து 25 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.

21. கொடுவா மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் ரூ.95 லட்சத்து 42 ஆயிரம் செலவில் கொடுவா மீன் வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

22. சென்னையில் வண்ணமீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத்திருவிழா ரூ.50 லட்சம் செலவில் நடத்தப்படும்.

23. உள்நாட்டு மீன்வர்கள் மீன்பிடி உபகரணங்கள் வாங்கிட 50% மானியமாக ரூ.1 கோடி வழங்கப்படும்.

24. சுகாதாரமான முறையில் மீன் விற்பனை செய்வதற்கான பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் மீன் விற்பனை நிலையங்கள் குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வாங்கிட பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 87 லட்சம் மானியம் வழங்கப்படும்.

25. மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் இடுபொருள் வழங்குதல் மற்றும் உவர்நீர் உயிர்க்கூழ்ம மீன் வளர்ப்பு ஆகிய திட்டங்களுக்கு ரூ. 1 கோடியே 40 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

26. கடலில் மிதவைக் கூண்டுகள் அமைத்து மீன் வளர்ப்பு மேற்கொள்ள மீன்வர்களுக்கு 40 விழுக்காடு மானியமாக ரூ.50 லட்சம் வழங்கப்படும்.

27. தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்கு 77 லட்சத்து 20 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

28. நீலகிரி மாவட்டத்தின் உயர்மட்ட நீர்நிலைகளில் டிரவும் மீன் இருப்பினை பெருக்குவதற்கு ரூ.77 லட்சம் செலவில் கருவுற்ற முட்டைகள் எடுத்து வரப்பட்டு, வளர்க்கப்பட்டு, இருப்பு செய்யப்படும்.

29. உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் பொருட்டு நாட்டின மீன்வகைகள் மற்றும் இந்திய பெருங்கெண்டை மீன்குஞ்சகள் 1 கோடியே 20 லட்சம் செலவில் ஆறுகளில் இருப்பு செய்யப்படும்.

500 மீன இளைஞர்களுக்கு மீன்பிடி படகு.. 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

30. மதுரை மாவட்டம் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மூலம் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தக மையம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

31. சென்னை மாதவரம் பகுதியிலுள்ள மணலி மற்றும் மாத்தூர் ஏரிகளை சீரமைத்து பொழுதுபோக்கு மீன்பிடிப்புடன் கூடியே சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

32. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் வியாபார கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கு மூன்று பனிக்கட்டி நிலையங்கள் அமைத்தல் மற்றும் மூன்று டீசல் விற்பனை நிலையங்களை புனரமைத்தல் ஆகிய பணிகள் ரூ.4 கோடியே 60 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

33. தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் வாயிலாக வண்ண மீன் வகைகளை இறக்குமதி செய்து உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் திட்டம் ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

banner

Related Stories

Related Stories