தமிழ்நாடு

“தமிழ்நாட்டின் ரியல் ஹீரோ சி.எம் மு.க.ஸ்டாலின்தான்..” : விழா மேடையில் பாராட்டி தள்ளிய நடிகர் பார்த்திபன்!

கொரோனா காலகட்டத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தானே களத்திற்கு சென்றார். அவரை நான் ரியல் ஹீரோவாக பார்க்கின்றேன் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டின் ரியல் ஹீரோ சி.எம் மு.க.ஸ்டாலின்தான்..” : விழா மேடையில் பாராட்டி தள்ளிய நடிகர் பார்த்திபன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை கொளத்தூரில் மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் என்ற தலைப்பில் பொதுக்கூட்ட விழா நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.எஸ். சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்ட விழாவில் அமைச்சர் சேகர்பாபு, நடிகர் பார்த்திபன், முனைவர் பர்வீன் சுல்தானா, கர்நாடக இசைக்கலைஞர் நித்தியஸ்ரீ மகாதேவன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“தமிழ்நாட்டின் ரியல் ஹீரோ சி.எம் மு.க.ஸ்டாலின்தான்..” : விழா மேடையில் பாராட்டி தள்ளிய நடிகர் பார்த்திபன்!

பொதுக்கூட்ட நிகழ்வில் பேசிய நடிகர் பார்த்திபன், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தால் நான் மற்றும் என்னை சேர்ந்த 10 பேர் நல்லா இருப்போம். ஆனால், முதல்வரை வாழ்த்தினால் ஒரு நாடே சிறப்பாக இருக்கும். முத்தமிழறிஞருக்கு மகனாக பிறந்ததே அவருக்கு பெரிய வாழ்த்து தான். அதை விட வேறு என்ன பெரிய வாழ்த்து இருக்க போகின்றது.

சினிமாவில் நடிகராக நடிப்பது சுலபம், ஆனால், கொரோனா காலகட்டத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தானே களத்திற்கு சென்றார். அவரை நான் ரியல் ஹீரோவாக பார்க்கின்றேன். உடலில் மட்டும் அல்ல மனதளவிலும் ஆரோக்கியமானவர் நம் முதல்வர். எல்லாருக்கும் முன்னோடியாக அவர் இருக்கிறார். எளிமையாக பழக கூடியவர்.

“தமிழ்நாட்டின் ரியல் ஹீரோ சி.எம் மு.க.ஸ்டாலின்தான்..” : விழா மேடையில் பாராட்டி தள்ளிய நடிகர் பார்த்திபன்!

முதல்வர் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சியில் பல புகைப்படங்களை பார்த்தேன். அதில் அவர் மிகப்பெரிய அரசியல் கட்சி தலைவரின் மகனாக இருந்தாலும் பல துயரங்களுக்கு ஆளாகிய காட்சிகளை கண்டேன். அவரது பொறுமை கடலினும் பெரிது, அந்த பொறுமையாலும், தனது போராட்ட குணத்தாலும் தான் இன்று பல இன்னல்களுக்கு மத்தியில் அவர் முதல்வராக உயர்ந்துள்ளார்.

பல நாட்களாக தன்னுடைய திறமையை மெருகேற்றி அந்த இடத்தை பிடித்துள்ளாரே தவிர வாரிசு அரசியலால் அவர் பதவிக்கு வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பொதுக்கூட்ட நிகழ்வில் பொதுமக்கள் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நடிகர் பார்த்திபன் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் தன் மனதை கவர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories