தமிழ்நாடு

மாந்திரீக பூஜைகள் செய்வதாக ரூ.65 லட்சம் மோசடி.. 10 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை ஏமாற்றி வந்த மர்ம கும்பல்!

மனநலம் பாதிக்கப்பட்டவரை குனப்படுத்த மாந்திரீக பூஜைகள் செய்வதாக 65 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட மூவர் கைது செய்தனர் தேனி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாந்திரீக பூஜைகள் செய்வதாக ரூ.65 லட்சம் மோசடி.. 10 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை ஏமாற்றி வந்த மர்ம கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் அருள்மணிகண்டன் - பிரியதர்ஷினி தம்பதியினர். கணவர் அருள்மணிகண்டனுக்கு 2009 ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகரன் அவரது மனைவி விஜி ஆகியோர் பிரியதர்ஷினி-க்கு அறிமுகமாகி உள்ளனர்.

தனது கணவர் அருள்மணிகண்டன் நிலை குறித்து ஜோதிடர் சந்திரசேகரனிடம் கூற அதற்கு ஜோதிடர் தங்களது கனவருக்கு நேரம் சரி இல்லைதான், மாந்தீரக பூஜைகள் செய்ய வேண்டும் மேலும் தனது வீட்டில் வைத்து பில்லி சூனியம், நடுநிசி பூஜை, மலையாளகுரு பூஜை, மாந்திரீக பூஜைகள் நடத்தினால் குனமடைந்து விடுவார் என கூறியுள்ளார்.

மாந்திரீக பூஜைகள் செய்வதாக ரூ.65 லட்சம் மோசடி.. 10 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை ஏமாற்றி வந்த மர்ம கும்பல்!

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக பிரியதர்ஷினி ஜோதிடர் சந்திரசேகரனுக்கு 65 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்தும் ஆண்டுகள் கடந்தும் கனவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றவுடன் ஜோதிடர் சந்திரசேகரனிடம் கேட்டதற்கு ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பிரியதர்ஷினி தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜோதிடர் சந்திரசேகரன் அவரது மனைவி விஜி மற்றும் கார் ஓட்டுனர் ஆனந்தன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் மூவரும் கூட்டு சேர்ந்து பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மாந்திரீக பூஜைகள் செய்வதாக ரூ.65 லட்சம் மோசடி.. 10 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை ஏமாற்றி வந்த மர்ம கும்பல்!

அதனைத் தொடர்ந்து ஜோதிடர் சந்திரசேகரன் அவரது மனைவி விஜி மற்றும் கார் ஓட்டுனர் ஆனந்தன் ஆகியோரை சிறையில் அடைப்பதற்கான பணியில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மாந்திரீக பூஜை மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவரை குனப்படுத்துவதாக கூறி 65 லட்சம் மோசடி செய்ததில் தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories