தமிழ்நாடு

Stalinism என்றால் என்ன?.. MLA-க்களுக்கு சட்டப்பேரவையில் பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

ஆசிரியர்களை எந்த சமுதாயம் போற்றுகிறதோ அந்த சமுதாயம் தான் சிறந்த சமுதாயமாக இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

Stalinism என்றால் என்ன?..  MLA-க்களுக்கு சட்டப்பேரவையில் பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பள்ளி கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில் 26 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

முன்னதாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், மானிய கோரிக்கை என்ற பொதுத்தேர்வுக்கான தேதியை நான்தான் வழங்குவேன் என ஆசிரியராக இருந்து தற்போது சட்டமன்ற தலைவராக இன்று ஆசிரியராக எனக்கு இந்த தேதியை வழங்கி இருக்கிறார்.

Stalinism என்றால் என்ன?..  MLA-க்களுக்கு சட்டப்பேரவையில் பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கவனஈர்ப்பு தீர்மானம் என்கிற பத்து மதிப்பெண் வினா, செவ்வாய்க்கிழமை அன்று வினாக்கள் விடைகளுக்கான இரண்டு மதிப்பெண் வினா, மீதமுள்ள மதிப்பெண்களுக்கு இந்த மானிய கோரிக்கை என்ற பொதுத் தேர்வை அனைவர் முன்பும் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அமைச்சராக இதுவரை எனக்கு 1,541 கோப்புகள் வந்துள்ளது. அதில் 1,536 கோப்புகளில் நான் கையெழுத்திட்டுள்ளேன். சட்டப்பேரவையில், முதலமைச்சரால், ஆளுநரால், துறையால் என 130 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அதில் 113 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 அறிவிப்புகள் இந்தாண்டு செயல்படுத்தப்படும்.

ஆடுற மாட்ட ஆடி கறந்து, பாடுற மாட்ட பாடி கறந்து, அரசாங்கத்தின் திட்டம் என்கிற பாலை இல்லாதோர் இல்லங்களில் சரியாக சேர்க்கின்ற நிர்வாகத்தின் பெயர்தான் Stalinism.

Stalinism என்றால் என்ன?..  MLA-க்களுக்கு சட்டப்பேரவையில் பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

பேராசிரியர் அன்பழகன் பள்ளி கல்வி வளாகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறந்து வைத்திருக்கின்றோம். அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகை, மாணவர் வருகை தற்போதைய நிலை என்ன என்பது குறித்து உடனடியாக தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கன்னிமரா நூலகத்தை புதுப்பிக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 90% பணி முடிந்துள்ளது விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். இல்லம் தேடி கல்வி திட்டத்தை கலிபோர்னியாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் குழு தனியாக ஆய்வு செய்து ஐக்கிய நாடுகள் சபையில் கல்வி மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் இதை முன் வைத்துள்ளனர், அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த திட்டம் இது.

எண்ணும் எழுத்தும் திட்டம் உலக அரங்கில் பேசப்பட்டிருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டிற்கு மட்டும் பெருமை அல்ல இந்தியாவிற்கே பெருமை. நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டு சேர்ப்பதற்காக 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நம்ம ஸ்கூல் திட்டத்தின்கீழ் பள்ளியை மேம்படுத்த 68.48 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறையை போக்க 10,143 ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அந்த இடங்கள் நிரப்பப்படும். மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கைபிடித்து கூட்டுச் செல்லும் முயற்சியை தி.மு.க அரசு கைவிடாது. ஆசிரியர்களை எந்த சமுதாயம் போற்றுகிறதோ அந்த சமுதாயம் தான் சிறந்த சமுதாயம். இந்த அரசு ஆசிரியர்களுக்கான அரசு" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories