தமிழ்நாடு

தூய்மை காவலர்களின் ஊதியம் ரூ.5000 உயர்வு : அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள 15 புதிய அறிவிப்புகள் இதோ!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானியக் கோரிக்கையில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ளார்

தூய்மை காவலர்களின் ஊதியம் ரூ.5000 உயர்வு : அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள 15 புதிய அறிவிப்புகள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதையடுத்து நேற்றில் இருந்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானியக் கோரிக்கையில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

தூய்மை காவலர்களின் ஊதியம் ரூ.5000 உயர்வு : அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள 15 புதிய அறிவிப்புகள் இதோ!

1.விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அவர்கள் வாழும் குடியிருப்புகளில் தேவையென கண்டறியப்பட்டுள்ள முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், கால்வாய்கள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள் போன்றவை பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து ரூ.1500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

2.மக்கள் பங்கேற்பு முறையில் தெரிவு செய்யப்பட்ட இலக்கு மக்கள் பட்டியலிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் ஒரு லட்சம் கிராமப்புர ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட ரூ.100 கோடி மதிப்பீட்டில் தனி நபர் மற்றும் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும்.

3 .ஊரகப் பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புள் வழங்கப்படும்.

4. தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் 70 லட்சம் மரக்கன்றுகள் ரூ.275 கோடி மதிப்பீட்டில் நடப்படும்.

5. ஊரகப் பகுதிகளில் ரத்தசோகையை குறைக்கும் பொருட்டு 21 லட்சம் முருங்கை கன்றுகள் ரூ.137 கோடி மதிப்பீட்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களால் வளர்க்கப்பட்டு, பத்து லட்சத்து 50 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

6. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும்66,130 தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3600 லிருந்து ரூ.5000 உயர்த்தி வழங்கப்படும்.

7. நகர்ப்புரத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண்மை வசதிகளை அருகிலுள்ள நகர்ப்புரங்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்திட ஒரு சிறப்புத் திட்டம் ரூ.69 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

8.மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதற்காக ரூ.30 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தூய்மை காவலர்களின் ஊதியம் ரூ.5000 உயர்வு : அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள 15 புதிய அறிவிப்புகள் இதோ!

9.ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

10.முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2043 புதிய சத்துணவு கூடங்கள் ரூ.154 கோடியில் மதிப்பீட்டில் கட்டப்படும்.

11. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஒரு சிறப்பு குழு அமைத்து உள்ளூர்மயமாக்கல் மூலம் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்கினை எய்த ரூ.20 கோடி செலவில் பயிற்சி வழங்கப்படும்.

12.ஊரக வளர்ச்சித் துறையின் பணிகளை அனைத்து நிலையிலும் சீரிய முறையில் கண்காணிக்க தொடக்கம் முதல் முடிவு வரை கணினிமயமாக்குதல் ரூ.5 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும்.

13. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கு ஏதுவாக மூன்று கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் காணொலி காட்சி வசதிகள் 388 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்படும்.

14.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசினை குறைக்கும் வகையில் 1500 கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் அமைக்க 500 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகள் பயன்படுத்தப்படும்.

15. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்கள் திட்ட பணிகளை திறம்பட கண்காணிக்க 224 புதிய வாகனங்கள் இருபது கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

banner

Related Stories

Related Stories