தமிழ்நாடு

“பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு”: +2 தேர்வை எழுதாத மாணவர்கள் குறித்து அமைச்சர் விளக்கம்!

பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வையுங்கள். அதை பார்த்துக் கொள்கின்ற பொறுப்பு எங்களுடையது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் உருக்கமான பேசியுள்ளார்.

“பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு”: +2 தேர்வை எழுதாத மாணவர்கள் குறித்து அமைச்சர் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வையுங்கள். அதை பார்த்துக் கொள்கின்ற பொறுப்பு எங்களுடையது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் உருக்கமான பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ம் தேதி தொடங்கி, இன்றுடன் 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, துறைச் சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அந்தவகையில், பிளஸ் 2 பள்ளி மாணவ, மாணவிகள் 50,000 பேர் தேர்வு எழுதவில்லை என்பதை குறித்த கவனயீர்ப்பு தீர்மானத்தை பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்து பேசினார்.

“பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு”: +2 தேர்வை எழுதாத மாணவர்கள் குறித்து அமைச்சர் விளக்கம்!

அப்போது அவர் பேசுகையில், “ 2020-21ல் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அவர்கள் 2021-22 ல் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,85,051 மாணவர்கள் பதிவு செய்து, அதில் 41,306 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. கடந்தாண்டு 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83,811 பேர் தோல்வியடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 78,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த மாணவர்கள் பள்ளிக்கு வராமலே போயிருப்பார். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைத்து 11ம் வகுப்பு தேர்வு எழுதி சுமார் 50,000 மாணவர்கள் தேர்ச்சி பெற வைத்துள்ளோம்.

“பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு”: +2 தேர்வை எழுதாத மாணவர்கள் குறித்து அமைச்சர் விளக்கம்!

+2 மாணவர்கள் தேர்வு பட்டியல் தயாரிக்கும் போது குறைந்தபட்சம் வருகை பட்டியல் 75% இருக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வு எழுதாத மாணவர்கள் பள்ளி மேலாண்மை குழு வாயிலாக கண்டறியப்பட்டு பள்ளி அளவில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படுத்தி ஆலோசனை வழங்கப்படும் .

துணைத்தேர்வு எழுது மாணவர்களுக்கு வழிகாட்டுதலை சிறப்பு பள்ளி மேலாண்மை குழு மூலம் தொடர்ந்து நடத்தப்படும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டார ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்து பொது தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

“பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு”: +2 தேர்வை எழுதாத மாணவர்கள் குறித்து அமைச்சர் விளக்கம்!

நான்கு வாரத்திற்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் இடை நீட்டலுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படும். அவர்களை கண்டறிந்து இடைநீற்றல் மாணவர்கள் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பல நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை எடுத்து வருகிறது.

பாடத்தில் மதிப்பெண் வாங்குவது மட்டும் முக்கியமல்ல. வாழ்க்கைக்கான மதிப்பீடுகளையும் வாங்க வேண்டும் தனி திறமை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நான் முதல்வன் திட்டம் உருவாக்கியுள்ளோம். பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வையுங்கள் அதை பார்த்துக் கொள்கின்ற பொறுப்பு எங்களுடையது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories