தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் : அவசர அவசரமாக டெல்லி சென்ற ஆளுநர் RN.ரவி!

இனி ஆளுநர் எந்த காரணத்தைக் காட்டியும் மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது என்பதால் ஆளுநர் டெல்லிச் சென்று, அடுத்தக்கட்டமாக என்ன செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருவதாகவும் தகவல் வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் : அவசர அவசரமாக டெல்லி சென்ற ஆளுநர் RN.ரவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். எனவே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலையும் பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் : அவசர அவசரமாக டெல்லி சென்ற ஆளுநர் RN.ரவி!

இந்த அவசரச் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ந் தேதியன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஒப்புதல் தராமல் தாமதப்படுத்துவதாக கருதிய நிலையில், நேரில் ஆளுநரை சந்திக்கவும் அரசு தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இந்த சூழலில் நவம்பர் 24 ம் தேதி ஆளுநர் தரப்பில் இருந்து சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் : அவசர அவசரமாக டெல்லி சென்ற ஆளுநர் RN.ரவி!

தமிழ்நாடு அரசும் 25 ம் தேதி அதாவது 24 மணி நேரத்திற்குள் விளக்கமும் அளித்தது. ஆனாலும், மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் தாமதப்படுத்தியதோடு, ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தொடர் தற்கொலைகள் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் தமிழ்நாடு அரசு பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். அதோடு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்றும் இன்னும் பல்வேறு விளக்கங்கள் கொடுத்து சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் : அவசர அவசரமாக டெல்லி சென்ற ஆளுநர் RN.ரவி!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக கடந்த ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அதற்கு பதிலாக புதிய சட்டத்தை இயற்றுங்கள் என்று நீதிமன்றமே அனுமதி அளித்திருந்த நிலையில், என்னென்ன காரணங்களுக்காக அந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததோ, அதற்கு பதிலாக புதிய சரத்துகளை உள்ளடக்கி புதிய சட்டத்தை இயற்றியதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், சட்ட மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஆன்லைன் ரம்மியால் விலைமதிப்பில்லா உயிர்கள் போவதை தடுத்து காப்பாற்ற, அடுத்த கட்ட முயற்சியாக மீண்டும் சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் : அவசர அவசரமாக டெல்லி சென்ற ஆளுநர் RN.ரவி!

இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20 தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவை கூடினால் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்படும், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்தவற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிச் சென்றுள்ளார். உச்சநீதிமன்றம் தொடங்கி ஒன்றிய அமைச்சர் வரை சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இனி ஆளுநர் எந்த காரணத்தைக் காட்டியும் மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது என்பதால் ஆளுநர் டெல்லிச் சென்று, அடுத்தக்கட்டமாக என்ன செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருவதாக தகவல் வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories