தமிழ்நாடு

ஒரு மாதம் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை.. எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கை நடைபெறும்? - முழு தகவல்!

நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், பதிலுரையோடு மானியக்கோரிக்கையும் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒரு மாதம் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை.. எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கை நடைபெறும்? - முழு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து அலுவல் ஆய்வுக்குழுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏப்ரல் 21ம் தேதி வரை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதம் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை.. எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கை நடைபெறும்? - முழு தகவல்!
ஒரு மாதம் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை.. எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கை நடைபெறும்? - முழு தகவல்!

அதன்படி, நாளை மார்ச் மாதம் 21ம் தேதி வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 22ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மார்ச் 23, 24, 27 ஆகிய தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனைதொடர்ந்து 28ம் தேதி நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கைக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளிக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து மார்ச் 29ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை 15 நாட்கள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

மார்ச் 29- நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் போக்குவரத்து துறை.

மார்ச் 30- நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

மார்ச் 31- உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை

ஏப்ரல் 1 - நெடுஞ்சாலைகள், பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் கண்மய சேவைகள் துறை

ஏப்ரல் 5 - வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம் துறை.

ஏப்ரல் 6 - வருவாய் மற்றும் பேரிடர், கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

ஒரு மாதம் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை.. எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கை நடைபெறும்? - முழு தகவல்!

ஏப்ரல் 10 - தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை,தமிழ் வளர்ச்சி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், செய்தி மற்றம் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு துறை

ஏப்ரல் 11 - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நூல்

ஏப்ரல் 12 - சட்டத்துறை மற்றும் எரிசக்தித்துறை, மதுவிலக்கு துறை

ஏப்ரல் 13 - வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, சுற்றுச்சூழல், வனம் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, கைத்தறி துறை

ஏப்ரல் 17 - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

ஏப்ரல் 18 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதி திராவிடர்மற்றும் பங்குடியினர் நலத்துறை

ஏப்ரல் 19 - சுற்றுலா, இந்து சமய அறிநிலையத்துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத் துறை,

ஏப்ரல் 20 - காவல், தீயணைப்பு மற்றும் மிட்புப் பணிகள்.

ஏப்ரல் 21 - காவல், தீயணைப்பு மற்றும் மிட்புப் பணிகள் மற்றும் பதிலுரை

வழக்கமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு ஜூன், ஜூலை மாதங்களில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். ஆனால் இந்த முறை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தோடு, தொடர்ச்சியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories