தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் சிறப்பு காவலர்கள்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிறப்புக் காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் சிறப்பு காவலர்கள்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கொத்தவால் சாவடி தாத்தா முத்தையப்பன் தெருவில் அமைந்துள்ள வ. உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையில் புதிய நியாய விலை கடையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன்," தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை மிக சிறந்த சேவை செய்து வருகின்றது. பொது வினியோக திட்டத்தின் கீழ்த் தரமான பொருட்களைக் கூட்டுறவுத் துறையின் மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் 3,5941 கடைகள் நியாயவிலை கடைகளாகச் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 3,516 கடைகள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகிறது. பொது கட்டடங்கள் அடிப்படையில் 24171 கடைகள் வாடகை இல்லாமல் செயல்பட்டு வருகிறது . இன்னும் 7952 வாடகை கடைகளாகச் செயல்பட்டு வருகிறது.

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் சிறப்பு காவலர்கள்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

அனைத்து நியாய விலை கடைகளிலும் சுகாதாரமான மற்றும் நவீன முறையில் மாற்றி அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க சிறப்புக் காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில இடங்களில் பொருட்களைக் கடத்தியவர்கள் மட்டுமின்றி அதற்கு உடந்தையாக இருந்த நியாய விலைக் ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் சிறப்பு காவலர்கள்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் உட்பட 6500 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வும் நடைபெற்றுள்ளது, கூடிய விரைவில் முடிவுகள் முறையாக வெளியிடப்படும். தனியார் வங்கிகளுக்கு இணையான வசதிகளைக் கூட்டுறவு வங்கிகளில் வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories