தமிழ்நாடு

“புதிதாக பரவும் H2N3 வைரஸ் காய்ச்சல்.. தமிழ்நாட்டில் நிலை என்ன?”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“புதிதாக பரவும் H2N3 வைரஸ் காய்ச்சல்.. தமிழ்நாட்டில் நிலை என்ன?”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 200 இடங்களில் நடைபெறுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சமீப காலமாக இந்தியா முழுவதும் H2N3 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது் காய்ச்சலை தடுக்க கடந்த வாரம் ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு வெளியிட்டது. அதனடிப்படையில் முதலமைச்சர் உத்தரவின் படி 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் தொடங்கி சென்னையில் 200 வர்டுகளில் 200 சிறப்பு காய்ச்சல்முகாம்களும் தமிழகம் முழுவதும் 800 இடங்களிலும் நடக்கிறது.

“புதிதாக பரவும் H2N3 வைரஸ் காய்ச்சல்.. தமிழ்நாட்டில் நிலை என்ன?”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

காய்ச்சல் பாதித்தவர்களுக்கு 11, 333 மருத்துவ கட்டமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருந்துகள் கையிருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெரிய அளவில் பதற்றம் அடைய தேவை இல்லை.

காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல், தொண்டை வலி, பதிப்பு ஏற்பட்டவர் சிகிச்சை பெறவும், காய்ச்சல் பதித்தவர்கள் வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளவும், கொரோனா பேரிடர் காலத்தில் கடைபிடித்த விதிமுறைகளை போல முக்ககவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பேரிடர் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும என கூறினார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒமைக்ரான் வகையான தாக்கம் கூடிக் கொண்டிருக்கிறது. தினசரி 20 முதல் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தினசரி ஏற்படுகிறது. மக்கள் தொடர் விழிப்புணர்வுடன் இருந்து ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தலின்படி முக கவசம் அணிந்து பாதிப்புகளிலிருந்து தவிர்க்கலாம்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories