தமிழ்நாடு

தமிழ்நாட்டின் ஆளுநர் யார்?.. அண்ணாமலைக்கு எப்படி அரசு ரகசியங்கள் தெரியும்?: அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநர் யார்?.. அண்ணாமலைக்கு எப்படி அரசு ரகசியங்கள் தெரியும்?: அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் ஆளுநர் யார்?. அண்ணாமலையா? ஆர்.என். ரவியா?. அண்ணாமலைக்கு எப்படி அரசு ரகசியங்கள் தெரியும்? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இணைய வழி சூதாட்டங்களைத் தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகள் முறைப்படுத்துதல் தொடர்பாகச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் சில சந்தேகங்களைக் கேட்டபோது நானும், உள்துறை, சட்டத்துறை செயலாளர்கள் இணைந்து தெளிவான விளக்கத்தைத் தந்திருந்தோம்.

ஆனால் இன்றைய தினம் ஆளுநர் கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் இல்லை என திருப்பி அனுப்பி இருக்கிறார். சட்டமன்றத்திற்கு சட்டமியற்றும் அதிகாரம் இருக்கிறது என நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஆனால் இன்றைக்கு ஆளுநர் சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறார். இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டின் ஆளுநர் யார்?.. அண்ணாமலைக்கு எப்படி அரசு ரகசியங்கள் தெரியும்?: அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி

ஆன்லைன் கேம் ஆஃப்லைன் கேம் என இரண்டையும் தெளிவுபடுத்தி உள்ளோம். ஆஃப்லைன் கேமில் தவறு நடப்பதற்கு வழி இல்லை. ஆனால் ஆன்லைனில் ப்ரோக்ராமர், ப்ரோக்ராமை செட்டப் செய்கிறார். அவர் எந்த கார்டை வேண்டுமானாலும் மாற்றி வைக்கலாம். எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். எனவே இது தடை செய்யப்பட வேண்டும் என்று சட்டத்தைக் கொண்டு வந்த போதே தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளோம்.

ஆனால் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி இருக்கிறார். இந்த சட்டத்தை மீண்டும் சட்டமன்றத்தில் சட்ட முன் வடிவைத் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமே கிடையாது.

தமிழ்நாட்டின் ஆளுநர் யார்?.. அண்ணாமலைக்கு எப்படி அரசு ரகசியங்கள் தெரியும்?: அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் குழுவை அமைத்து பொதுமக்கள், மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்டு 95% பேரின் ஆதரவோடு தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது முறை இயற்றி அனுப்பும் போது ஆளுநர் திருப்பி நிராகரிப்பதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது.

தமிழ்நாட்டின் ஆளுநர் அண்ணாமலையா? ஆர்.என். ரவியா?. ஆளுநர் என்ன விளக்கம் கேட்டார் என அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? ஆளுநர் அண்ணாமலையிடம் சொன்னாரா?. இந்த ரகசியங்களை எல்லாம் ஆளுநர் அண்ணாமலை அழைத்து விவாதித்தாரா?. ஆன்லைன் சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பிறகு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கெல்லாம் யார் பொறுப்பு? இது குறித்து எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயார் " என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories