தமிழ்நாடு

“அண்ணாமலையின் அடாவடி பேச்சு.. இன்னும் 2 நாட்கள் கூட நீடிக்க வாய்ப்பில்லை” : நாஞ்சில் சம்பத் பேச்சு !

அண்ணாமலை தொடர்ந்து அடாவடித்தனமாகப் பேசி வருகிறார். அவரின் இந்த பேச்சுக்கள் மூலம் அவர், அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

“அண்ணாமலையின் அடாவடி பேச்சு.. இன்னும் 2 நாட்கள் கூட நீடிக்க வாய்ப்பில்லை” : நாஞ்சில் சம்பத் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

கே.டி.ராகவன் தொடங்கி, திருச்சி சூர்யா வரை பா.ஜ.க முக்கிய புள்ளிகள் மீது சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து பா.ஜ.க நாறிக் கிடக்கிறது. இது எல்லாம் ஒரு கட்சியா? என்று பெண்களே பேசும் அளவிற்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க உள்ளது.

“அண்ணாமலையின் அடாவடி பேச்சு.. இன்னும் 2 நாட்கள் கூட நீடிக்க வாய்ப்பில்லை” : நாஞ்சில் சம்பத் பேச்சு !

அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பாஜவின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார். இதுபோன்ற சர்ச்சையால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் இடைநீக்கம் செய்யப்பட்டார்; சில நாட்களுக்கு பிறகு தான் விலகுவதாக அவரே அறிவித்தார். இதனிடையே பாஜகவின் முக்கிய நிர்வாகியான dr.சரவணன் பாஜகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்தார்.

இதைத்தொடர்ந்து காயத்ரி ரகுராம் விலகினார். பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் விலகும் நிலையில், நேற்றைய முன்தினம் அக்கட்சியில் ஐடி விங் தலைவரான சி.டி.ஆர் நிர்மல் குமார், தான் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

“அண்ணாமலையின் அடாவடி பேச்சு.. இன்னும் 2 நாட்கள் கூட நீடிக்க வாய்ப்பில்லை” : நாஞ்சில் சம்பத் பேச்சு !

மேலும் சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை என்றும், அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம் என்றும், அண்ணாமலை ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு என்றும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் நேற்று பாஜகவின் ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை மேற்கு மாவட்டம் பாஜக ஐடி விங்கை சேர்ந்த துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 13 பேர் ஒரே நாளில் விலகியுள்ளனர்.

“அண்ணாமலையின் அடாவடி பேச்சு.. இன்னும் 2 நாட்கள் கூட நீடிக்க வாய்ப்பில்லை” : நாஞ்சில் சம்பத் பேச்சு !

ஆரம்பத்தில் இருந்தே அண்ணாமலை பொது வெளியில் உளறி வரும் நிலையில், அவர் பல்வேறு சிக்கலில் சிக்கியுள்ளார். அண்மையில் ரபேல் வாட்ச், விமானத்தில் எமெர்ஜென்சி எக்ஸிட் கதவை திறந்து விளையாடிய விவகாரம் என பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து அண்ணாமலை சர்ச்சையில் சிக்கி வருகிறார். மேலும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அண்ணாமலை மீது பெரிய குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.

இப்படி இருக்கும் சூழலில் அண்ணாமலை தலைவராக இருக்கும் பாஜகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதோடு இதன் மூலம் அண்ணாமலையை யாரும் மதிக்கவில்லை என்றும் நிரூபனம் ஆகியுள்ளது.

“அண்ணாமலையின் அடாவடி பேச்சு.. இன்னும் 2 நாட்கள் கூட நீடிக்க வாய்ப்பில்லை” : நாஞ்சில் சம்பத் பேச்சு !

இந்நிலையில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அண்ணாமலை தொடர்ந்து அடாவடித்தனமாகப் பேசி வருகிறார். அவரின் இந்த பேச்சுக்கள் மூலம் அவர், அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது, எந்த தலைவரும் தன்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் அண்ணாமலை ஆளுமை தலைவருகளுடன் அவரை ஒப்பிட்டுக்கொள்கிறார். அவரின் செயல்களால் அவரை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து பாஜவிற்குள்ளேயே எழுந்துள்ளது.

குறிப்பாக அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற அவரை ஏற்க எடப்பாடி தரப்பு தயாராக இல்லை. அதேவேளையில் அதிமுகவுடனான கூட்டணியை டெல்லி மேலிடம் விரும்புகிறது. எனவே இன்னும் 2 நாளில் பாஜக தலைவராக அவர் நீடிக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories