அரசியல்

“துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்” -பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய IT விங் நிர்வாகிகள்!

பா.ஜ.கவில் இருந்து IT-விங் தலைவர், மாநில செயலாளர் விலகியதை தொடர்ந்து சென்னை மேற்கு மாவட்ட ஐடி நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு விலகியுள்ளது அண்ணாமலைக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

“துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்” -பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய IT விங் நிர்வாகிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

கே.டி.ராகவன் தொடங்கி, திருச்சி சூர்யா வரை பா.ஜ.க முக்கிய புள்ளிகள் மீது சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து பா.ஜ.க நாறிக் கிடக்கிறது. இது எல்லாம் ஒரு கட்சியா? என்று பெண்களே பேசும் அளவிற்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க உள்ளது.

“துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்” -பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய IT விங் நிர்வாகிகள்!

அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பாஜவின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார். இதுபோன்ற சர்ச்சையால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் இடைநீக்கம் செய்யப்பட்டார்; சில நாட்களுக்கு பிறகு தான் விலகுவதாக அவரே அறிவித்தார். இதனிடையே பாஜகவின் முக்கிய நிர்வாகியான dr.சரவணன் பாஜகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்தார்.

இதைத்தொடர்ந்து காயத்ரி ரகுராம் விலகினார். பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் விலகும் நிலையில், நேற்றைய முன்தினம் அக்கட்சியில் ஐடி விங் தலைவரான சிடிஆர் நிர்மல் குமார், தான் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும் சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை என்றும், அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம் என்றும், அண்ணாமலை ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு என்றும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.

“துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்” -பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய IT விங் நிர்வாகிகள்!

இதை தொடர்ந்து நேற்று பாஜகவின் ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர்.. இன்னும் எத்தனை பேரை.. காவு வாங்க போகுதோ..??

இறைவனுக்கே வெளிச்சம் ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார்

தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார், தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார்...(அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை)

“துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்” -பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய IT விங் நிர்வாகிகள்!

அடுத்து பேராசிரியர் சீனிவாசன் மாநில.பொதுச்செயலாளர் மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள் அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு.. தன்னைவிட அறிவாளியான பேராசியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை..

அடுத்து நைனார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை. மாவட்ட தலைவர்கள் , மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு கோ** கொ** என்று போலீஸ் தோரணையில் ஏளானமாக பேசுவது. இவர் வந்து தான் எல்லாம் கிழிச்ச மாதிரி எல்லாம் கம்பு சுத்துறானுங்க இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான்...

இந்த சங்கிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கு எவனையாது தூத்தனும்ணா மொத்தமா தூத்துறது அவன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான் அவன் உழைப்பு என்ன இப்பேர்பட்டவன் எப்படி திடீர்னு பேசுறான் இவனே இப்படி பேசுறான்ன இவன் என்ன செய்தார்கள் என்று ரெண்டு பக்கமும் யோசிக்க மாட்டானுங்க.. பாஜக தலைவராக அண்ணன் முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார்.

“துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்” -பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய IT விங் நிர்வாகிகள்!

அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?? சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பாப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல..நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும், வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பகளுக்கு அவர் புனிதராக தான் தெரிவார்...

இன்னும் இந்த வார் ரூம் கோஸ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.. இந்த சங்கிகளுக்கு ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன் எப்படியும் என்ன திட்டுவிங்க அதுக்கு முன்னாடி ஒரு தீவிர வெறிபிடிச்ச சங்கியே இப்படி போறானே இவனுங்க எந்தளவுக்கு கேவலமா இருக்கானுங்கனு கொஞ்சமாது யோசிச்சி பாருங்க.” என்று குறிப்பிட்டிருந்தார்.

“துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்” -பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய IT விங் நிர்வாகிகள்!

இந்த நிலையில் தற்போது சென்னை மேற்கு மாவட்டம் பாஜக ஐடி விங்கை சேர்ந்த துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 13 பேர் ஒரே நாளில் விலகியுள்ளனர். மேலும் இதுகுறித்து அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "கட்சியில் சில காலமாக அசாதாரன சூழ்நிலை நிலவி வந்த நிலையில் ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது.

ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான், பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம் ஆகவே இதை செய்கிறேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்” -பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய IT விங் நிர்வாகிகள்!

ஆரம்பத்தில் இருந்தே அண்ணாமலை பொது வெளியில் உளறி வரும் நிலையில், அவர் பல்வேறு சிக்கலில் சிக்கியுள்ளார். அண்மையில் ரபேல் வாட்ச், விமானத்தில் எமெர்ஜென்சி எக்ஸிட் கதவை திறந்து விளையாடிய விவகாரம் என பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து அண்ணாமலை சர்ச்சையில் சிக்கி வருகிறார். மேலும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அண்ணாமலை மீது பெரிய குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.

இப்படி இருக்கும் சூழலில் அண்ணாமலை தலைவராக இருக்கும் பாஜகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதோடு இதன் மூலம் அண்ணாமலையை யாரும் மதிக்கவில்லை என்றும் நிரூபனம் ஆகியுள்ளது.

banner

Related Stories

Related Stories