தமிழ்நாடு

"இந்தியாவிற்கு ஆளுநர் பதவியே தேவையில்லை".. பத்திரிகையாளர் 'இந்து' என்.ராம் கருத்து!

இந்தியாவிற்கு ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் கருத்து தெரிவித்துள்ளார்.

"இந்தியாவிற்கு ஆளுநர் பதவியே தேவையில்லை"..  பத்திரிகையாளர் 'இந்து' என்.ராம் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார்.

"இந்தியாவிற்கு ஆளுநர் பதவியே தேவையில்லை"..  பத்திரிகையாளர் 'இந்து' என்.ராம் கருத்து!

அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். அண்மையில் கூட தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதுதான் சரியானது என பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் இந்தியாவிற்கு ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கருத்து தெரிவித்துள்ளார்.

"இந்தியாவிற்கு ஆளுநர் பதவியே தேவையில்லை"..  பத்திரிகையாளர் 'இந்து' என்.ராம் கருத்து!

திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், இந்தியாவிற்கு ஆளுநர் பதவி என்பது தேவையில்லை.

ஒரு மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்பதைத் தமிழகம் என்று மாற்றலாமா?. மாநில அரசு அளித்த மனுக்களை டெல்லிக்கு அனுப்பாமல் தனது டேபிளிலேயே வைத்துக் கொண்டு இருக்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர். ஆளுநரின் இந்த போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மதிப்பது ஆளுநரின் கடமை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories