தமிழ்நாடு

ஆட்டோ மீது மோதிய கார்.. பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோரம்: பலியான பச்சிளம் குழந்தை

பிரசவம் முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்பம் விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளது இராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ மீது மோதிய கார்.. பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோரம்: பலியான பச்சிளம் குழந்தை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்ன அடைக்கான் (28). அந்த பகுதியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவரும், இராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் பகுதியைச் சுமதி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஆட்டோ மீது மோதிய கார்.. பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோரம்: பலியான பச்சிளம் குழந்தை

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுமதி, தனது தலை பிரசவத்திற்காக பெற்றோர் வீடான இராமநாதபுரத்துக்கு சென்றுள்ளார். அங்கே அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டதால், இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

ஆட்டோ மீது மோதிய கார்.. பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோரம்: பலியான பச்சிளம் குழந்தை

இதையடுத்து இவர்கள் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ராமநாதபுரத்திலிருந்து வேதாளைக்கு பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அடைக்கான், சுமதி, பிறந்த குழந்தை அவரது குடும்பத்தை சேர்ந்த காளியம்மாள் என அனைவரும் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆட்டோ ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரத்தை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஆட்டோமீது நேருக்கு நேர் மோதியது. இதில் நிலைகுலைந்து போன ஆட்டோ, தடுமாறியது. மேலும் அந்த காரும் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நின்றது.

ஆட்டோ மீது மோதிய கார்.. பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோரம்: பலியான பச்சிளம் குழந்தை

இந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ் உட்பட ஆட்டோவில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறை மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அனைவரையும் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆட்டோ மீது மோதிய கார்.. பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோரம்: பலியான பச்சிளம் குழந்தை

அங்கே இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ், சுமதி, அடைக்கான் மற்றும் பிறந்த பிஞ்சு குழந்தை ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதோடு உயிருக்கு போராடும் நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காளியம்மாள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆட்டோ மீது மோதிய கார்.. பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோரம்: பலியான பச்சிளம் குழந்தை

இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி பகுதி காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் விக்னேஷ் (34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிரசவம் முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்பம் விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளது இராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories