தமிழ்நாடு

சாலை விபத்தில் உயிரிழந்த காதலன்.. ஒரே வாரத்தில் விபரீத முடிவெடுத்த காதலி: சோகத்தில் குடும்பம்!

சென்னை அருகே சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததால் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்த காதலன்.. ஒரே வாரத்தில் விபரீத முடிவெடுத்த காதலி: சோகத்தில் குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த ஆவடி கோயில் பதாகை பூம்பொழில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வினோதினி. இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் MBA படித்து வந்துள்ளார்.இவர் முத்தா புதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி வசந்த் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதுபற்றி அறிந்த வினோதினி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் யாருடனும் பேசாமல் தனது காதலன் பற்றியே நினைத்து வந்துள்ளார்.

சாலை விபத்தில் உயிரிழந்த காதலன்.. ஒரே வாரத்தில் விபரீத முடிவெடுத்த காதலி: சோகத்தில் குடும்பம்!

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது காதலி வினோதினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வினோதினி உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த காதலன்.. ஒரே வாரத்தில் விபரீத முடிவெடுத்த காதலி: சோகத்தில் குடும்பம்!

முதற்கட்ட விசாரணையில், சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததால், மன உளைச்சலில் இருந்த காதலி வினோதினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories