தமிழ்நாடு

ஆபாச படம் காண்பித்து மாணவியிடம் அத்துமீற முயன்ற வாலிபர்.. தக்க பாடம் புகட்டிய போலிஸ்!

சென்னை அருகே பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் ஆபாச படத்தைக் காட்டி தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

ஆபாச படம் காண்பித்து மாணவியிடம் அத்துமீற முயன்ற வாலிபர்.. தக்க பாடம் புகட்டிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் வினோபாஜி நகரை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி பள்ளிக்குச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் செல்போனில் முகவரி ஒன்றை காட்டி இந்த இடம் எங்கு உள்ளது என்று கேட்டுள்ளார். அப்போது மாணவி பார்க்கும் போது அவருக்கு ஆபாசப் படத்தைக் காட்டியுள்ளார்.

ஆபாச படம் காண்பித்து மாணவியிடம் அத்துமீற முயன்ற வாலிபர்.. தக்க பாடம் புகட்டிய போலிஸ்!

மேலும் மாணவி முன்பு தவறான சைகையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அழுதபடியே மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். பிறகு நடந்தவற்றைப் பள்ளி தலைமையாசிரியரிடம் குறியுள்ளார். இதுபற்றி அறிந்த பொதுமக்கள் உடனே இந்த வாலிபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

ஆபாச படம் காண்பித்து மாணவியிடம் அத்துமீற முயன்ற வாலிபர்.. தக்க பாடம் புகட்டிய போலிஸ்!

பிறகு அந்த வாலிபரை காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். அந்த வாலிபரிடம் போலிஸார் நடத்திய விசாரனையில் அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பதும் கால் டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் தனியாக நடந்து செல்லும் மாணவிகளைக் குறிவைத்து ஆபாச படத்தைக் காட்டி தவறாக நடந்து கொள்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலிஸார் சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories