தமிழ்நாடு

வாடகைக்கு வீடு கேட்பதுபோல் மூதாட்டியிடம் 8 சவரன் நகை கொள்ளை: முதல் திருட்டிலேயே சிக்கிய வாலிபர்கள்!

சென்னையில் வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி நகையைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலிஸார் கைது செய்தனர்.

வாடகைக்கு வீடு கேட்பதுபோல் மூதாட்டியிடம் 8 சவரன் நகை கொள்ளை: முதல் திருட்டிலேயே  சிக்கிய வாலிபர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிண்டி பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணாதேவி. மூதாட்டியான இவரது குடியிருப்பில் 10 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் கீழ்த்தளத்தில் உள்ள ஒரு வீடு காலியாக உள்ளது. இதனால் வீட்டிற்கு வெளியே "TOLET" பலகையைத் வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி காலை இரண்டு பேர் வீட்டு வாடகை கேட்டு வந்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டை பார்த்து விட்டு வாடகை தொகை எவ்வளவு என்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவரும் கொடுக்கக்கூறி பேரம் பேசியவர்கள் திடீரென மூதாட்டியான சொர்ணாதேவியை கீழே தள்ளிவிட்டு கத்தியைக் காட்டி அவர் கழுத்தில் கிடந்த தங்க செயின், வளையல், மோதிரம் என 8 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

பிறகு பணத்தேவைக்காகக் கொள்ளை அடிப்பதாகவும், தங்களை மன்னித்து விடுங்கள் என்றும் கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

வாடகைக்கு வீடு கேட்பதுபோல் மூதாட்டியிடம் 8 சவரன் நகை கொள்ளை: முதல் திருட்டிலேயே  சிக்கிய வாலிபர்கள்!

பின்னர் இது குறித்து மூதாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு வாலிபர்கள் மூதாட்டியின் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது . அதில் பதிவான உருவத்தை வைத்து போலிஸார் யார் அவர்கள் என விசாரணை நடத்தினர்.

இதில் கோவையைச் சேர்ந்த அஜீத் மற்றும் பிரபு என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், அஜீத்தின் அம்மா டி.பி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாடகைக்கு வீடு கேட்பதுபோல் மூதாட்டியிடம் 8 சவரன் நகை கொள்ளை: முதல் திருட்டிலேயே  சிக்கிய வாலிபர்கள்!

இவரின் மருத்துவச் செலவிற்குப் பணம் தேவைப்பட்டதால் நண்பர்கள் சொன்ன ஆலோசனைப் படி மூதாட்டியின் வீட்டில் புகுந்து கொள்ளையடித்து மாட்டிக் கொண்டுள்ளார். முதல் முறையாகத் திருடுவதாகவும் தனக்கு வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லை எனவும் அவர் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து தற்போது போலிஸாரிடம் சிக்கிக் கொண்ட இருவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளை மீட்டு போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories