தமிழ்நாடு

“அசிங்கமா இல்லையா Mr.அண்ணாமலை..” : வீடியோவை திரித்து வெளியிட்ட அண்ணாமலை - முகத்திரையை கிழித்த TR.பாலு!

“அசிங்கமா இல்லையா Mr.அண்ணாமலை..” : வீடியோவை திரித்து வெளியிட்ட அண்ணாமலை - முகத்திரையை கிழித்த TR.பாலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் பா.ஜ.க இருப்பைக் காட்டிக்கொள்ள முட்டிமோதும் நிலைமைக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக, பா.ஜ.க மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை ஊடகங்களில் தன்னுடையே பெயர் எப்படியாவது வரவேண்டும் என்பதற்காக தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதையே தனது உத்தியாக கடைபிடித்து வருகிறார்.

ஐ.ஏ.எஸ் வரை படித்து பட்டம் பெற்ற அண்ணாமலை, தான் பேசுவதில் துளியும் உண்மை இல்லை என்பதை தெரிந்தும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி, ஊடகங்களில் பிரபலமானார். தமிழ்நாடு அரசு பல சிறப்புத் திட்டங்களை கொண்டுவந்தாலும் எதையாவது பேசி, தன்னுடையே இருப்பை காட்டிக்கொள்ள அற்ப அரசியலை மேற்கொள்ளும் நபராக அண்ணாமலை இருக்கிறார் என்ற எண்ணம் சொந்தக் கட்சிக்காரர்களிடமே உள்ளது.

“அசிங்கமா இல்லையா Mr.அண்ணாமலை..” : வீடியோவை திரித்து வெளியிட்ட அண்ணாமலை - முகத்திரையை கிழித்த TR.பாலு!

அடுத்தடுத்து ஆபாச வீடியோ, ஆடியோ மற்றும் பாலியல் சர்ச்சை புகார்களில், பா.ஜ.க.வில் இருந்த பலரும் வெளியேறி வருகின்றனர். அந்தவகையில், பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கட்சியில் உளவு பார்க்கும் வேலை அதிகரித்துவிட்டதாகவும், சொந்த கட்சி பெண்களுக்கே கட்சியில் உள்ளவர்களால் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.கவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி வருகிறார்.

இதுபோல குற்றச்சாட்டுகள் ஏராளமாய் அண்ணாமலையின் மீது இருக்க அதற்கெல்லாம் பதில் அளிக்காத அண்ணாமலை, தனது வார்ரூம் மூலம் வீடியோவை வெட்டி ஒட்டி புரளிப்பரப்பும் வேலையை தொடங்கியுள்ளார்.

அந்தவகையில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., சமீபத்தில் கலந்துக்கொண்டு பேசிய நிகழ்ச்சியில் வீடியோ முழுவதையும் விட்டுவிட்டும், ஒருபாதியை மட்டும் வெட்டி ஒட்டி, தி.மு.க அரசுக்கு எதிராகவும், மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோவின் உண்மை தன்மையை முழுவதும் புரிந்துக்கொள்ளும் வகையில் பலரும் வீடியோ முழுவதையும் வெளியிட்டு அண்ணாமலைக்கு பதில் அளித்துள்ளனர்.

சமீபத்தில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசுகையில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடித்ததாகவும் அதற்கு பதில்புதிய கோயில்கள் கூடுதல் வசதிகளும் கட்டிக்கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

“அசிங்கமா இல்லையா Mr.அண்ணாமலை..” : வீடியோவை திரித்து வெளியிட்ட அண்ணாமலை - முகத்திரையை கிழித்த TR.பாலு!

உண்மை நிலை இப்படி இருக்க, அண்ணாமலை மற்றும் அவருக்கு உடந்தையாக போலி செய்தி வெளியிடும் தினமலர் நாளேடு உள்ளிட்ட சில வதந்தி பரப்பும் கும்பல் உண்மைக்கு மாறாக பேசி வருகின்றனர். இந்நிலையின் அண்ணாமலை மற்றும் வதந்தி பரப்பும் கும்பலுக்கு தி.மு.க தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொதுவாக மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றித் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று அசிங்கமான அரசியல் நடத்தும் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பலரும் அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories