தமிழ்நாடு

25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்.. நண்பரின் துக்க நிகழ்விற்கு வந்தபோது நடந்த சோகம்!

சென்னையில் 25வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்.. நண்பரின் துக்க நிகழ்விற்கு வந்தபோது நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி நாராயணன். இவர் ரஷ்யாவிற்கு சென்று அங்கு மருத்துவம் படித்து முடித்துள்ளார். பின்னர் கோவாவில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில் இவரது நண்பர் தீலிப் என்பவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது 30வது நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாலாஜி நாராயணன் சென்னை வந்துள்ளார்.

25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்.. நண்பரின் துக்க நிகழ்விற்கு வந்தபோது நடந்த சோகம்!

பிறகு விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, நண்பரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் உறவினர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது அவர் சாலையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்.. நண்பரின் துக்க நிகழ்விற்கு வந்தபோது நடந்த சோகம்!

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்தாரா? என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த நண்பரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நண்பர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories