தமிழ்நாடு

“திமுக அரசு எடுத்த நடவடிக்கை : தமிழ்நாட்டில் 1.14 லட்சம் பேருக்கு வேலை..”: அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

தமிழ்நாடு முழுவதும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக 71 மெகா முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

“திமுக அரசு எடுத்த நடவடிக்கை : தமிழ்நாட்டில் 1.14 லட்சம் பேருக்கு வேலை..”: அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூரில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் பேசுகையில், “இளைஞர்களுக்கு சிந்தனை, லட்சியம் குறிகோள் வேண்டும். சிந்தனை அதற்கேற்ற உழைப்பு இருந்தால் உங்களால் முடியும், நம்மால் முடியும்.

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 71 வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு இதுவரை 1,14.000 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புவழங்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “கரூர் மாவட்டத்தில் 42,000 ஆண்கள், 48,000 பெண்கள், 1400 மாற்றுத்திறனாளிகள் என சுமார் 91,000 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு படிப்படியாக வேலை வாய்ப்பை உருவாக்கித் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories