தமிழ்நாடு

'பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும்'... அவதூறு பேசுவோருக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும் என்பது போல் தி.மு.க அரசின் மீது பழி போடப்படுகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

'பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும்'... அவதூறு பேசுவோருக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை அருள்மிகு பேரூர் பட்டீஸ்வர் திருக்கோவிலில் சிவராத்திரி விழா துவக்க முன்னேற்பாடுகளைத் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "ரூ.3.5 கோடி செலவில் பேரூர் கோவிலின் திருப்பணிகள் வெகு விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்கான ஆலோசனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டது.

'பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும்'... அவதூறு பேசுவோருக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

1000 ஆண்டுகள் கடந்த புராதன கோவில்களைப் பாதுகாக்கும் வகையில் 104 திருக்கோவில்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. தற்போது அத்திட்டத்தின் கீழ் கூடுதலாக கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி மருதமலை கோவிலுக்கான ரோப் கார் திட்டத்திற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது.

'பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும்'... அவதூறு பேசுவோருக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

'பழுத்த மரத்தில் தான் கல்லடிபடும் என்பது போல் தி.மு.க அரசு மீது பழி போடப்படுகிறது. தி.மு.க அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் அவதூறு வீசுபவர்களை பற்றி நாங்கள் கண்டுகொள்வதில்லை. ஆன்மீக புரட்சிக்கு வித்திடும் ஆட்சிதான் தி.மு.க" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories