தமிழ்நாடு

“மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க மோடி அரசு சதி.. முதல்வர் ஒருபோதும் ஏற்கமாட்டார்” : அமைச்சர் உறுதி!

புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் இனி மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

“மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க மோடி அரசு சதி.. முதல்வர் ஒருபோதும் ஏற்கமாட்டார்” : அமைச்சர் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும்.

மேலும் மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுத்து வருகின்றது. புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் இனி மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.

மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது, புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் ஏற்றுகொள்ளமாட்டார். நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது, தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் முதல்வர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்" என கூறினார்.

banner

Related Stories

Related Stories